‘பட்டத்தை பறிக்க நூறு பேரு’ – ஜெயிலர் பட பாடலால் ட்ரிகரான விஜய் ரசிகர்கள்

0
1865
Rajini
- Advertisement -

விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயிலர் படத்தின் பாடல் வரிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளாக தெடர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்து இருக்கிறது. ஆனால், கடந்த சில காலங்களாக ரஜினி நடிப்பில் வந்த எந்த படமும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

குறிப்பாக கடைசியாக வந்த “அண்ணாத்த” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் படு தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை எனவே இவருக்கும் “ஜெயிலர்” படத்தின் வெற்றி மிகவும் முக்கியம் என்பதினால் மும்முரமாக படம் இயக்குவதில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் என்ற பெயரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தின் முதல் பாடலான “காவாலா” பாடல் கடந்த வாரம் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலானது துள்ளல் அதிகம் உள்ள கலக்கலான பாடலாக வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலை அருண் காமராஜ் எழுதி இருக்கிறார். தற்போது பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் தான் ஒலித்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இரண்டாவது பாடல்:

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியிருக்கிறது. ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் நேற்று மாலை வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த பாடலை ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக, இந்த பாடலில் வரும் ‘ உன் அளும்ப பாத்தவன்… உன் ங்கொப்பன் விசில கேட்டவன்… உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்… பேர தூக்க நாலு பேரு… பட்டத்த பறிக்க நூறு பேரு… குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என்ற வரிகள் பக்காவாக ரஜினிக்கு பொருத்தமானதாக இருக்கிறது.

விஜய்க்கு பதிலடி கொடுக்க காரணம்:

அது மட்டும் இல்லாமல் இந்த வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏன்னா, சமீப காலமாக ரஜினியின் நடிப்பில் வெளிவந்த படங்களெல்லாம் தோல்வியை அடைந்ததால் அவருடைய சம்பளமும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், விஜய் 175 கோடி சம்பளம் பெற்று உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாகவும், எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என்றும் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement