90ஸ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்த குரலுக்கு சொந்தக்காரரின் பிறந்தநாள் – இவர் பாடிய பாடல்கள் என்னென்ன தெரியுமா ?

0
1432
Sukhwinder Singh
- Advertisement -

வித்தியாசமான குரலால் அனைவரையும் ஈர்த்த பாடகர் சுக்வீந்தர் சிங்கின் பிறந்த நாள் அன்று பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்திய அளவில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் சுக்வீந்தர் சிங். இவர் 90 காலகட்டத்தில் பிரபலமான பாடகராக இருந்தவர். இவர் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரைச் சேர்ந்தவர்.

-விளம்பரம்-

இவர் முண்டா சௌத்தால் என்ற பஞ்சாபி ஆல்பம் பாடியிருக்கிறார். பின் இவர் ஆரம்பத்தில் இசை குழுவில் இசைக்கச்சேரிகளை நடத்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இவருக்கு தமிழில் ரட்சகன் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் இவருடைய வித்தியாசமான குரல் அனைவரையும் ஈர்த்தது. மேலும், இவர் பாலிவுட்டில் ஆஜாசனம் என்ற பாடலை பாடி மிகப் பிரபலமான பாடகர் ஆனார்.

- Advertisement -

அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பாடி இருக்கிறார். 90 காலகட்டத்தில் இவருடைய குரலை கேட்காமல் யாரும் இருந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் ஸ்லம் டாக் மில்லனியர் படத்தில் ஜெய் ஹோ என்ற பாடலை பாடி இருக்கிறார். அந்தப்பாடலுக்கு இவருக்கு பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்காக அகாடமி விருது வென்றது. சிறந்த பாடலுக்கான கிராமி விருதையும் பெற்றது.

அதிலும், இவர் உயிரே படத்தின் தைய்ய தைய்யா என்ற பாடலை பாடி இருக்கிறார். பின் இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்தும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதோடு இவரின் பாடலுக்காக தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார். இப்படி இந்தியா முழுவதும் புகழ்பெற்ற பிரபலமான பாடகர் சுக்வீந்தர் சிங் அவர்கள் பிறந்த நாள் இன்று. இவருடைய பிறந்தநாளுக்கு இவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு இவருடைய ரசிகர்கள் இவரின் பிறந்தநாள் அன்று இவரை பற்றி இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement