நீங்கள் தமிழரா? கண்டுபிடிக்க புது டெக்னிக்கை பயன்படுத்திய மாரிமுத்து

0
666
marimuthu
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் எதிர்நீச்சல் மாரிமுத்து இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது “எதிர் நீச்சல்” தொடர் மூலம் தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு ஒரு நிலையில் இவர் சமூக வளைத்ததில் கேலிக்கு உள்ளாகி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 18+ ட்விட்டர் பக்கம் ஒன்றில் அழகான பெண்ணின் புகைப்படம் ஒன்று போட்டு ‘can i call you’ என்று குறிப்பிடபிபட்டு இருந்தது. இந்த பதிவிற்கு கீழ் மாரிமுத்து என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து Yes என்று பதிவிட்டு ஒரு போன் நம்பரும் போடப்பட்டு இருந்தது. இந்த பதிவை பார்த்த பலரும் சீரியலில் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான நபராக இருந்துவிட்டு இப்படி ட்விட்டரில் வழிந்துகொண்டு இருக்கிறார் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் தான் “எதிர்நீச்சல்” சீரியல் மாரிமுத்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தற்போது நடந்தது வரும் சர்ச்சை குறித்து கேட்க “ஒரு பெண் நம்பர் கேட்டால் கொடுப்பதில் என்ன தப்பு என்று கூறினார் மாரிமுத்து. மேலும் உங்களை பூமர் என்று சில கூறுகிறார்களே என கேட்டதற்கு பூமர் என்றால் என்ன? “நான் சாமி கும்பிட மாட்டேன், கோவிலுக்கு போக மாட்டேன், சம்பரதாயம் பாக்கமாட்டேன். எப்போதும் 20 வருடங்கள் முன்னோக்கி தான் இருப்பேன். நானெல்லாம் ஜப்பானில் இருக்க வேண்டியவன் எனக் கூறினார். இது சோசியல் மீடியாவில் பரவி வைரலானது.

மீண்டும் சர்ச்சையாக பேசிய மாரிமுத்து :

இந்நிலையில் சர்ச்சை முடிவுக்கு வருவதற்கு முன்னரே மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி ட்ரெண்ட் ஆகியுள்ளார் எதிர் நீச்சல் மாரிமுத்து. அதாவது சமீபத்தில் மாரிமுத்து கொடுத்திருந்த பேட்டியில் கூறுகையில் “தமிழ் மணப்பெண் சேலை கட்டிக்கொண்டு நடனம் ஆடிவந்து தாலியை வாங்க கூடாது என்பது என்னுடைய உறுதியான கருத்து. முதல் நாள் திருமணத்திற்கு பிறகு அல்லது திருமணத்திற்கு பிறகு அடுத்த நாள் ஆடட்டும். ஆனால் திருமணத்தின் போது பெண் தலைகுனிந்துதான் தாலியை கழுத்தில் வாங்க வேண்டும். பெண்கள் தலைகுனிந்து வந்தால் தான் அழகு என்று கூறினார்.

-விளம்பரம்-

நீங்கள் தமிழரா :

இப்படி மாரிமுத்து பேசுகையில் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது பண்டிகை தானே அதில் என்ன இருக்கிறது என கேட்க. என்ன ரொம்ப தப்ப இருக்கீங்க, நீங்க தமிழர் தானா? எங்கயோ வெளிமாநிலத்தில் சேர்ந்தவர் போன்று பேசுகிறீர்கள் என்று கூறினார். மேலும் பெண் என்பவர் தலைகுனிந்து ஆணுக்கு பெண் அரை அடி விட்டு நடந்து வந்தால் தான் அழகு என்று. இது பிற்போக்கு கிடையாது, முற்போக்கு என அதிரடியாக பேசியுள்ளார்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் :

இந்நிலையில் இவரின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வைரலாகி நெட்டிசன்கள் பலவிதமான மீம்களை தயார் செய்து கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த விடியோவை விமர்சித்து சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் “எதிர்நீச்சல்” மாரிமுத்து மிகவும் கேக்கலாமா மனநிலை…பிற்போக்கின் உச்ச கட்டம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement