Ileana D Cruz: நடிகை இலியானா நடிக்க தடை- என்ன காரணம் தெரியுமா?

0
372
- Advertisement -

சினிமாவில் நடிக்க நடிகை இலியானாவிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் நடிகை இலியானா. “இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் கட்டி இழுத்தவர் இலியானா. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார்.

-விளம்பரம்-

இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். அதிலும் விஜய் – சங்கர் கூட்டணியில் வெளிவந்திருந்த நண்பன் படத்தில் இலியானா நடித்திருந்தார். இந்த படம் இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

- Advertisement -

இலியானா திரைப்பயணம்:

இந்த படத்தின் தமிழ் ரீமேத்தில் தான் விஜய்க்கு ஜோடியாக இலியான நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இலியானா தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் என்று சொல்லலாம். அதோடு இவரின் நடனம் தான் இந்த மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப்பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. பின் 2012 ஆம் ஆண்டு பர்பி என்ற படம் மூலம் இவர் இந்தி மொழியில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் எட்டு ஹிந்தி படங்களில் நடித்தார்.

பாலிவுட்டில் இலியானா:

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க இலியானாவிற்கு தடை விதித்திற்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, இலியானா அவர்கள் இந்தியில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். இருந்தாலும், அவருக்கான அங்கீகாரம் பாலிவுட்டில் குறைவாகத்தான் இருக்கிறது. இதனால் இலியானா தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

இலியானா மீது புகார்:

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் இலியானாவை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன்பணமும் கொடுத்திருக்கிறார். ஆனால், இலியானா கால்ஷீட் கொடுக்காமல் இழுத்து அடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் இலியானா மீது புகார் கொடுத்து முறையிட்டு இருக்கிறார்.

இலியானா நடிக்க தடை:

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நான்கு மொழி திரைப்படங்களிலும் இலியானாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத தடையை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து இலியானா தரப்பில் எந்த ஒரு தகவலுமே கூறவில்லை. தற்போது இலியானா அவர்கள் ரன்தீப் ஹூடா உடன் Unfair and Lovely என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் இப்படி ஒரு செய்தி வந்து இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement