எல்லைமீறி நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்த எதிர்நீச்சல் மதுமிதா- அதிர்ச்சியில் தமிழ் ரசிகர்கள்

0
2304
Madhumitha
- Advertisement -

எதிர்நீச்சல் நாயகி ஜனனி முத்தக் காட்சியில் நெருக்கமாக நடித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது.
இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மதுமிதா குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. இவர் இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் கன்னட சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். இவர் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் நாயகி மதுமிதா முத்தக் காட்சியில் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோ குறித்த தகவல் :

அதாவது, எதிர்நீச்சல் நாயகி மதுமிதா அவர்கள் தமிழ் சீரியலில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு சீரியலில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் இவர் கதாநாயகனுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் சீரியல் ஜனனியா இது! குடும்ப குத்து விளக்கு ஜனனி, இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளாரா! என்று பலரும் ஷாக் ஆகி கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement