எதிர்நீச்சல் சீரியல் நடிகர் அருண் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.
சீரியலில் ஜனனி அவர்கள் ஆதி குணசேகரன் வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். மேலும், சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அருண் குணசேகரனுக்கு எதிரியான எஸ் கே ஆர் இன் தம்பி. இதனால் குணசேகரன் அவர்கள் ஆதிரை- அருண் கல்யாணத்தை நடத்தக்கூடாது என்று நினைக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்:
அதோடு சொத்துக்காக கரிகாலனை ஆதிரைக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். ஆனால், ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. தற்போது சீரியலில் வீட்டை விட்டு ஜனனி- சக்தி இருவரும் வெளியேறி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் குணசேகரனின் வக்கீல் வீட்டிற்கு வந்து இந்த சொத்திற்கும் மருமகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னவுடன் ஜனனியை எப்படியாவது வீட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறார்.
சாணக்கியா குறித்த தகவல்:
ஜனனி -சக்தி வீட்டிற்கு திரும்ப வருவார்களா? குணசேகரின் திட்டம் நிறைவேறுமா? என பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாவர் நடிகர் சாணக்கியா. இந்த நிலையில் நடிகர் சாணக்யாவை குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமானவர். இவர் சின்ன திரையில் மட்டும் இல்லாமல் வெள்ளி திரைகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
அசின் படத்தில் சாணக்கியா:
இவர் முதன் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் தான் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானார். இந்த சீரியலில் இவர் கோபியின் மகனாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு சூர்யா- அசின் நடிப்பில் வெளியாகியிருந்த கஜினி படத்தில் அசின் ஒரு விளம்பரத்தில் நடிப்பது போன்ற காட்சி வரும். அந்த காட்சியில் அவருக்கு குழந்தையாக சாணக்யா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த வியாபாரி படத்திலும் இவர் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.
சாணக்கியா நடித்த படங்கள்:
அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த பரமசிவன் படத்தில் நடித்திருக்கிறார். பின் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தில் நடிகர் ஜெய்யின் குழந்தை பருவ காட்சியில் சாணக்கியா நடித்திருக்கிறார். அதன் பின் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் குழந்தை பருவ சூர்யாவாக இவர் தான் முதலில் நடித்திருந்தது. அதற்கு பிறகு தான் சூர்யா நடித்தார். மேலும், வளர்ந்து இவர் முதன்முதலாக ஜீ தமிழில் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டாய் என்ற சீரியலில் நடிகனாக நடித்திருக்கிறார். இப்படி இவர் பல சீரியல்களில், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தான் சாணக்கியாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.