எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்கவே கஷ்டப்படும் எதிர் நீச்சல் சீரியல் நடிகை – நலம் விசாரித்த ராதிகா, ரசிகர்கள் ஆறுதல்.

0
919
Radhika
- Advertisement -

திவ்யா வெங்கடசுப்பிரமணியம் மக்களால் கனிகா என்று திரைப்படம் முழுவதும் அறியப்படுபவர் .இவர் மதுரையில் 1982 ஆம் ஆண்டு பிறந்தார் இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையின் மீது ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும் பொழுது பாட்டு பாடுதல் நாடகம் இது போன்ற நடித்துள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியை பங்கு பெற்று வெற்றி பெற்றார் இதனால் திரைத்துறைக்கு வர காரணமாக இருந்தது.

-விளம்பரம்-

திரைபயணம் மற்றும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் இவரின் இனிய குரலுக்கு சரியான தமிழ் உச்சரிக்கும் திறமையினால் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியபோது பின்னணி குரல் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான 5ஸ்டார் படத்திலும் பாடம் பாடி உள்ளார். குறிப்பாக சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாக்கு இவர் பின்னணி குரல் கொடுத்தார். தனது முதல் திரைப்படம் ஆன 2002ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.

- Advertisement -

நடிகை பிளஸ் பாடகி :

அதை முதலில் 20 படங்களுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். பின்னணி பாடகியாக இரண்டு படங்களுக்கு மேல் பாடியுள்ளார். இவர் விளம்பரங்களில் நடித்துள்ளார் சென்னை சில்க்ஸ் விளம்பரம், கல்யாண் சேலை, ரத்னா தங்க மாளிகை, டாட்டா கோல்டு, ஆச்சி மசாலா போன்ற பல விளம்பரங்களில் விளம்பரங்களில் நடித்துள்ளார். திரைப்படத்தின் கொண்ட ஆர்வத்தினால் சிறப்பான நடிப்பின் காரணமாக தமிழ் மட்டும் மலையாளத்தில் பல விருதுகள் பெற்றார்.

எதிர்நீச்சல் கனிகா :

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தொடர்ந்து தொடர்ந்து சீரியல் மற்றும் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

-விளம்பரம்-

கனிகாவிற்கு காலில் காயம் :

இந்நிலையில் தான் தன்னுடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் நடிகை கனிகா சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதாவது காலில் கட்டுப்போட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அந்த பதிவில் “ஒரு வாரம் முடிந்தது இன்னமும் 5 வாரங்கள் செல்ல வேண்டியது உள்ளது. நான் தற்போது புதிய பூட்ஸ் உடன் நடக்க கற்றுக்கொண்டு வருகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

கனிகாவின் இந்த புகைப்படத்தை கண்டு நலம் விசாரித்துள்ள ராதிகா ‘என்ன ஆனது’ என்று கேட்டு இருக்கிறார். இதற்கு கனிகா ‘கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது, மேலும், தசையிலும் அடிபட்டு இருக்கிறது’ என்று கூறியுள்ளார். நடிகை கனிகா போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் அடிபட்ட கால் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement