ஒரே ஒரு எபிசோட் – Trp வரலாற்றில் எந்த தமிழ் சீரியலும் செய்யாத சாதனையை படைத்த எதிர் நீச்சல்

0
1895
Ethirneechal
- Advertisement -

டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் செய்திருக்கும் புதிய சாதனை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

-விளம்பரம்-

மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். பெண்களும் பக்கம் சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அருண் குணசேகரனுக்கு எதிரியான எஸ் கே ஆர் இன் தம்பி.

சீரியலின் கதை:

இதனால் குணசேகரன் அவர்கள் ஆதிரை- அருண் கல்யாணத்தை நடத்தக்கூடாது என்று நினைக்கிறார். அதோடு சொத்துக்காக கரிகாலனை ஆதிரைக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். ஆனால், ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். தற்போது சீரியலில் ஆதிரை-அருண்க்கு திருமணம் ஆகும் என்று பல எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது.

-விளம்பரம்-

இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. பின் ஆதிரை- கரிகாலனுக்கு ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணத்தை பதிவு செய்ய குணசேகரன் வலுக்கட்டாயமாக இழுத்து செல்கிறார். இன்னொரு பக்கம் அருண் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார். இதை அறிந்து ஜனனி ஹாஸ்பிடலுக்கு சென்று அருணை பார்க்கிறார். மேலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிரையின் திருமணம் நடைபெற்று இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்த நிலையில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் செய்த சாதனை:

அதாவது, கடந்த வாரம் ஆதிரையின் திருமண டிராக் ஒளிபரப்பான நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் டாப்பிங் இருக்கிறது. கிட்டத்தட்ட 11.16 டிஆர்பி ரேட்டிங் பெற்று இருக்கிறது. இதுவரை 9:30 மணி சிலாட்டில் வெளியான தொடர்களிலேயே அதிக டேட்டிங் பெற்ற முதல் சீரியல் என்ற சாதனையை எதிர்நீச்சல் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த வாரத்திற்கான ரேட்டிங்கிலும் நம்பர் 1 சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் தான் இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் டீமிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement