தான் வளர்த்த செல்லப்பிராணி இறந்த பின்னும் அதை தெய்வமாக வணங்கும் அதன் உரிமையாளர்.            

0
1375
- Advertisement -

வீட்டில் உள்ள ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் புகைப்படத்தை வைத்து வணங்குவதுபோல கும்பகோணத்தில் ஒரு குடும்பம் தான் வளர்த்த செல்ல பிராணி நாய் தீடிரென இறந்து விட்ட நிலையில் தினமும் அந்த நாயின் புகைபடத்திற்கு மாலை அணிவித்து அதற்க்கு பிடித்தமான உணவுகளை படையலாக வைத்து தினமும் வணங்கி வருவது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

கும்பகோணத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் இவர் ஓவியக்கலைஞர் ஆவர். இவரது மனைவி கலைச்செல்வி இந்த தம்பதியினருக்கு மனோ என்ற மகனும் ராகமாலிகா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு மற்றொரு பிள்ளையும் உள்ளது அது தான் இவர்கள் ஆசை ஆசையாக வளர்த்து வந்த செல்லப்பிராணி ஜிஞ்சி இது நாய் “கோல்டன் ரெட்ரீவர்” இனத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஜிஞ்சி நாய் ஏழு ஆண்டுகளுக்கு மேல் அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளர்ந்து அவர்களிடம் பிணைப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன் தீடிரென உடல் நலக் குறைவால் அவர்களை விட்டு பிரிந்து சென்றது. அதாவது ஜிஞ்சி உயிரிழந்தது அது அந்த குடும்ப நபர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து அவர்கள் மீண்டு வர ஒரு வாரத்திற்கு மேலானது. இந்நிலையில் ஜிஞ்சிவின் புகைப்படதிற்கு தினமும் மாலை அணிவித்து வணங்கி வருகிறனர். இது குறித்து கூறிய அவர் “ ஜிஞ்சி எங்கள் வீட்டில் ஒரு உறுப்பினர் போல் வளர்த்து வந்தோம், நாங்கள்எங்கு சென்றாலும் அவனையும் கூடவே கூடிட்டு தான் செல்வோம். நாங்கள் அடிக்கடி சென்னை செல்வோம் அப்போதெல்லாம் அவன் எங்களுக்கு முன்னதாக காருக்குள் போய் அமர்ந்துவிடுவான்” என்றும் அவர் கூறினார்.

“ஒரே ஒரு முறை மட்டும் அவனை தனியாக வீட்டில் விட்டு டெல்லி சென்று விட்டோம் ஆனால் அவனை விட்டு வந்தது தாங்கி கொள்ளமுடியாமல் மறுநாளே விமானம் மூலம் வீட்டிற்கு வந்து விட்டோம் என்றும்” அவர் கூறினார். “தீபாவளி, பொங்கல் என்றால் அவனுக்கும் சேர்த்து தான் புது துணிகளை எடுப்போம். நல்லது கேட்டது என அனைத்திற்கும் எங்கள் கூட இருந்தான். ஒரு முறை எங்கள் வீட்டில் பாம்பு வந்து விட்டது அப்போது நானும் என் வீட்டில் இல்லை ஜிஞ்சி மட்டும் சத்தம் போட்டு அந்த பாம்பினை விரட்டியடித்தான். அப்போது வீட்டில் என் மனைவி மற்றும் என் குழந்தைகள் மட்டுமே இருந்தன என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

-விளம்பரம்-

அவன் இழப்பை ஏற்று கொள்ள முடியவில்லை என்றும் அதில் இருந்து இப்போது தான் மீண்டு வருகின்றோம். அத்துடன் அவன் புகைப்படத்திற்கு தினமும் மாலை அணிவித்து விளக்கேற்றி அவனுக்கு பிடித்த உணவுகளை படையலாக வைத்து அவனை தெய்வமாக வணங்கி வருகின்றோம். எங்களை காத்த அவனுக்கு நாங்கள் செய்யும் நன்றி கடன் இது தான்” என்றும் அழுதுக்கொண்டே அவர் கூறினார்                       

Advertisement