பங்களா வீடு, 4 வேலை ஆட்கள், 10 நாய், எங்கு சென்றாலும் கார் என்று இருந்த பிந்து கோஷின் இன்றய நிலை இது தான்.

0
4457
bindhu
- Advertisement -

வாய்ப்பு வந்தால் ராஜா இல்லைனா கூஜா, இது எந்த துறைக்கு பொருந்துமோ இல்லையோ சினமா துறைக்கு மிகவும் பொருந்தும். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பிறந்த பலர், இன்று எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் 80களில் மனோரமாவிற்கே காமெடியில் போட்டியாக விளங்கியவர் நடிகை விமலா. செம்மையாக குத்தாட்டம் போடும் இவரை பிந்துகோஷ் என கூறினால் தான் தெரியும். ரஜினி, கமல், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிந்து கோஷ்.

-விளம்பரம்-

தற்போது 60 வயதை தாண்டிய பிந்துவிற்கு பல நோய்கள் தாக்கி வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து வருகிறார். மேலும், அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே கஷ்டப்பட்டு வருகிறார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய பிந்து கோஷ், நான் இறந்துட்டதாகவும் பல முறை வதந்திகள் வந்திருக்குது. எவ்வளவு செல்வச் செழிப்பா வாழ்ந்திருக்கீங்க. இந்த நிலையில் உங்களைப் பார்க்க வருத்தமா இருக்குது’னு அக்கம்பக்கத்தினர் பலரும் ஆறுதலாப் பேசுறாங்க. நான் உயிரோடு இருக்கிற விஷயமே இப்போதான் பலருக்கும் தெரிஞ்சிருக்குது.நடிகர் விஷால் தன் மேனேஜர் மூலமா ஐயாயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார். மறுநாள் எங்கிட்ட போன்ல பேசின விஷால், ‘இனி மாதம்தோறும் 2,500 ரூபாய் வழங்குறேன். புதுப்பிக்கப்படாமல் இருக்கிற உங்க நடிகர் சங்க உறுப்பினர் சந்தாவைப் புதுப்பிச்சுத்தரேன்’னு சொன்னார்.

- Advertisement -

தைராய்டு பிரச்னைதான் என் உடல்நலனை ரொம்பவே பலகீனமாக்கிடுச்சு. அதனாலதான் என்னால தொடர்ந்து நடிக்க முடியலை. கணவர் இறந்ததும், கடந்த 13 வருஷமா வீட்டோடு முடங்கியிருக்கும் தனிமை வாழ்க்கையே என் நிலையாகிடுச்சு. கொஞ்ச தூரம் நடக்கவே, எனக்கு ரெண்டு பேரின் உதவி தேவைப்படுது. சில நாள்களுக்கு முன்ன வீட்டுக்குள்ள கீழ விழுந்துட்டேன். அதனாலதான் பெல்ட் கட்டிகிட்டிருக்கேன்.சினிமாவுல பீக்ல இருந்த சமயம். உழைச்சு சேர்த்த பணத்துல தசரதபுரத்துல பங்களா வீடு கட்டி வசிச்சேன். சமையலுக்கு, வீட்டு வேலைக்குனு தனித்தனியே நாலு வேலையாள்கள் இருந்தாங்க. பத்து நாய்களை வளர்ந்தேன். கார்லதான் பெரும்பாலும் வெளிய போவேன். குடும்ப வறுமையால் அந்த வீட்டை வித்துட்ட நிலையில, இன்னிக்கு ஆட்டோல போறதுக்கே பல முறை யோசிக்கிறேன். ஒவ்வொரு நாளும் மூணு வேளையும் பதினாறு மாத்திரைகளைச் சாப்பிடுறேன்.

Bindhu-Ghosh

இதுக்கெல்லாம் போதிய பணவசதியில்லை. சிரமத்துலதான் இருக்கேன். சேர்ல உட்கார்ந்தபடியே சமைச்சுடுவேன். எப்படியோ, ஒவ்வொரு நாள் பொழுதையும் ஓட்டிக்கிட்டிருக்கேன்” என்று கூறியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிந்து கோஷ் தற்போதும் அதே கதையை தான் சொன்னார். ஆனால், இப்போது தனது இடுப்பில் அணியும் 700 பெல்ட் வாங்க கூட பணம் இல்லை என்றும், இங்கே போனால் உதவி கிடைக்கும் அங்கே போனால் உதவி கிடைக்கும்னு சொல்றாங்க. ஆனால், நடக்க முடியாத என்னால் எங்கு செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல் நான் பிச்சை எடுப்பதாக சில செய்திகள் எல்லாம் வருகிறது. இப்படி வாழும் வாழ்க்கையை நான் வாழாமலேயே இருந்துவிடலாம் என்று வேதனையுடன் தெரித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement