ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்த நயன், கூட்ட நெரிசலில் கையை பிடித்த ரசிகர், விக்கியின் ரியாக்ஷன் – வைரலாகும் வீடியோ.

0
990
Nayanthara
- Advertisement -

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே ரசிகர்களுடன் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்து, திரையரங்கில் நடனமாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-599-1024x576.jpg

மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல்.இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா?

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை:

விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் தேவி திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து விக்னேஷ் மற்றும் நயன்தாரா படம் பார்க்க வந்து இருந்தனர். இதனால் ரசிகர்கள் அங்கு பெரும் திரளாக கூடி இருந்தனர்.

-விளம்பரம்-

திரையரங்கில் விக்கி ஆடிய நடனம்:

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த நயன்தாராவுடன் ரசிகர்கள் பலர் செல்ஃபீ எடுத்தனர். கூட்ட நெரிசலில் சிக்கிய நயன்தாராவை விக்னேஷ் சிவன் கையை பிடித்து அழைத்து சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் நயன்தாராவின் கையை பிடித்தார். இதனால் கொஞ்சம் பதறிப்போன நயன் சட்டென்று கையை எழுத்துக்கொண்டார். இதை கவனித்த விக்னேஷ் சிவனும் நயனை அரவனித்தபடி பத்திரமாக குத்தி சென்றார்.

கையை பிடித்த ரசிகர் :

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே போல சத்தியம் சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் பலரும் காத்துவாக்குல 2 காதல் படத்தின் புகைப்படங்களை வைத்து ‘டூ டூ’ என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். இவர்கள் ஆடுவதை பார்த்து ஆடியன்ஸ்களும் நடனமாடி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். பின் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரசிகர்களுடன் நடனமாடியிருக்கிறார். ஆனால், அந்த சர்ப்ரைஸ்ஸில் நயன்தாரா இல்லை.

Advertisement