உலகம் முழுவதும் தனெக்கென ஒரு தனி ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ ப்ரேம், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் படத்தை பிரிட்டோ தயாரித்து வருகிறது. மேலும், இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அடுத்த மாதம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சதீஷ் அவர்கள் விஜய் குறித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சதீஷ். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : நீச்சல் குளத்தில்,நீச்சல் உடையில் செல்ஃபீ புகைப்படத்தை வெளியிட்ட SS மியூசிக் பூஜா.
தளபதி விஜய்யுடன் பைரவா, கத்தி ஆகிய படங்களில் காமெடி நடிகராக நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் சதீஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, விஜய் அவர்கள் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் குட்டி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் சிம்ரன் அவர்களுக்கு கண்ணு தெரியாது. விஜய் பாடுவதை வைத்து தான் அவர்கள் குட்டி என்று கண்டு பிடிப்பார். அந்த படத்தில் மூன்று பாடல்கள் வரும். அந்த மூன்று பாடல்களையும் வெவ்வேறு பாடகர்கள் பாடி இருப்பார்கள்.
எப்படி குட்டி இந்த படத்தில் மிமிக்கிரி பண்ணுவாரா? இது தான் என்னுடைய சந்தேகம் என்று விஜய் மற்றும் இயக்குனரிடமும் கேட்டேன். அதற்கு விஜய் அவர்கள் ‘டேய் போடா, படம் ஹிட்டாச்சி இல்ல என்று சொன்னார். அந்த படத்தில் இருந்து நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோஷம்.என்னுடைய ஒட்டுமொத்த குடும்பமே அவருடைய ரசிகர் என்று சொல்லலாம். உண்மையிலேயே அந்த வருடத்தில் வெளிவந்த படையப்பா, முதல்வன், வாலி, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய நான்கு படங்களும் சூப்பர் ஹிட். அதுவும் விஜய் படம் எமோஷனல் வேற லெவெல்ல இருக்கும் என்று சதீஸ் கூறினார்.