இதுக்குமேல பாக்க முடியல நிறுத்துங்க – 1000 எபிசோடை கடந்த சீரியலை நிறுத்த சொல்லும் தீவிர ரசிகர்கள்.

0
2136
zee-tamil
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை கொண்டுவர தொலை காட்சிகள் அனைத்தும் மூலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது தொலைக்காட்சி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-69-1024x557.jpg

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்றைய தேதியில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, ‘யாரடி நீ மோகினி’ சீரியல் தான். சன் தொலைக்காட்சியில் ஒளிப்பிரான நந்தினி சீரியலுக்கு பிறகு தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பட்ஜெட்டை கொண்டு உருவான சீரியல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க, வில்லிகளாக பாத்திமா பாபு, சைத்ரா ரெட்டி இருவரும் நடித்தனர்.

இதையும் பாருங்க : அசையும் சொத்து இத்தனை கோடி, அசையா சொத்து இத்தனை கோடி, கடன் மட்டும் இத்தனை கோடி – வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள கமல்.

- Advertisement -

ஆரம்பத்தில் இந்த சீரியலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் நீக்கப்பட்டு தற்போது பிரபல சீரியல் நடிகரான ஸ்ரீகணேஷ் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் வில்லியாக ஸ்வேதா என்ற முக்கிய கதாபத்திரத்தில் வில்லியாக சைத்ரா ரெட்டி நடித்து வந்தார்.

வீடியோவிற்கு கீழ் இருக்கும் கமன்ட்டுகளை பாருங்க

இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்வீதா கதாபாத்திரம் இறந்துவிட்டது போல காண்பிக்கப்பட்டு இருந்தது.முக்கிய கதாபாத்திரமான ஸ்வேதா இறந்துவிட்டதால் இந்த சீரியல் இன்னும் ஒருசில எபிசோடுகளில் நிறைவடைந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இருந்ததாக காண்பிக்கப்பட்ட ஸ்வேதா மீண்டும் உயிருடன் வந்துவிட்டார்.

-விளம்பரம்-

அதேபோல முத்தரசனை அடைய திட்டம் தீட்டி வருகிறார் ஸ்வேதா.. இப்படி லாஜிக்கே இல்லாமல் சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலை இதற்கு மேல் பார்க்க முடியாது தயவு செய்து நிறுத்திவிடுங்கள் என்று இந்த சீரியலின் ரசிகர்களே கதறி வருகின்றனர்.

Advertisement