லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. ஆர்ஜே பாலாஜியும், சரவணனும் இணைந்து இயக்குனராக மூக்குத்தி அம்மன் படத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஆர்ஜே பாலாஜி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் கூட இருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கிறார் என்று அறிவித்த போது பலரும் ‘என்னது நயன்தாரா அம்மனா’ என்று கேலி செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மாடர்ன் அம்மனாக கச்சிதமாக பொருந்தியுள்ளார் நயன்தாரா. சாமி பெயரை சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்கள், சாமி நம்பிக்கையால் ஏமாறும் மக்கள் போன்றவற்றை மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கிளைமாக்ஸ் காட்சியில் வந்த ஒரு காட்சி ஜீவா நடிப்பில் வெளியான சீறு படத்தில் இடம்பெற்ற காட்சி என்று நெட்டிசன்கள் ஆதாரங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலி சாமியாராக இருக்கும் வில்லன் இருக்கும் மேடையில் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா தோன்றி இருப்பார். அப்படி தோன்றும் போது அனைத்து தொலைக்காட்சி மற்றும் சிசிடிவி காட்சியில் தன்னுடைய பேச்சை அனைவரும் பார்க்க வேண்டும் என்று அம்மன் ஆன நயன்தாரா மேஜிக் செய்வார்.
அதன் பின்னர் அணைத்து டிவிக்களிலும் நயந்தாராவின் உருவம் தோன்றும். அதனை அனைவரும் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். அப்போது ஒரு சின்ன வீட்டிற்குள் சட்டை போடாத நபர் ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு டிவியை பார்த்துக்கொண்டு இருப்பார் இந்தக் காட்சிதான் ஏற்கனவே ஜீவா நடிப்பில் வெளியான சீரு படத்தில் இடம்பெற்றிருக்கும். ஜீவா நடிப்பில் வெளியான சீறு படத்தின் எடிட்டர் எடிட்டர் லாரன்ஸ் கிசோர். மூக்குத்தி அம்மன் படத்தின் எடிட்டர் ஆர் கே செல்வா. அப்படி இருக்க எப்படி இரண்டு