ஷாலினிக்கு முன்பே அஜித் இந்த நடிகையை தான் காதலித்தார், 10 லவ் லெட்டர் கொடுத்தார் – போட்டுடைத்த நடிகர்.

0
11111
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் அஜித் – ஷாலினி ஜோடியும் ஒருவர். ஆனால், அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே நடிகை ஹீராவை காதலித்து வந்ததாக பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நடிகர் அஜித் தொடரும் படத்தின் போதே ஹீராவை காதலித்தார். மேலும் அப்போதே ஹீரோவிற்கு 10 லவ் லெட்டரை எழுதினார். அதில் ஒரு லவ் லெட்டரை நானும் ரமேஷ் கண்ணாவும் எடுத்து விட்டோம். ஆனால், அவர்களது காதலுக்கு ஹீராவின் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் அப்போது ஹீரா மிகுந்த பிசியாக நடித்து வந்தார். எனவே, அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஹீரா ராஜகோபால் அவர்கள் சைக்காலஜி படித்து முடித்த பின்னர் சினிமா துறையில் களம் இறங்கினார். இதனைத்தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளிவந்த ‘இதயம்’ படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், நடிகர் முரளி உடன் இணைந்து நடித்த இதயம் திரைப்படத்தின் மூலமாக தமிழிலும் ,தெலுங்கிலும் இவருக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் சஞ்சய் தத் நடித்த அமானத் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு பாலிவுட்டில் அறிமுகமானார். பின் மலையாளத்தில் மோகன்லால் நடித்த நிர்ணயம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் சினிமா துறையில் முன்னணி நடிகர்களான கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, அஜித்குமார், நாகர்ஜுனா, பாலகிருஷ்ணாவின், கார்த்திக், ரவி தேஜா மற்றும் அனில் கபூர் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

- Advertisement -

இவர் தன்னுடைய நடிப்புத் திறனால் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று உள்ளார். இந்த ஒரு படத்திலேயே நடிகை ஹீரா ராஜ கோபால் அவர்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் என்று கூட சொல்லலாம். அதன் பின்னர் இவர் “திருடா திருடா, நீ பாதி நான் பாதி, சதிலிலாவதி, அவ்வை சண்முகி, தொடரும், சுயம்வரம்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். மேலும், தல அஜித்துக்கு ஜோடியாக ஹீரா ‘காதல் கோட்டை மற்றும் தொடரும்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார். மேலும்,இந்த இரு படங்களும் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது கூட சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் அஜித்,ஹீரா இருவரும் காதலித்து திருமணம் செய்ய உள்ளார்கள் என்று வதந்திகள் கூட வந்தது.

Image result for actress heera ajith"

மேலும், பல வருடங்கள் இந்த தகவல் செய்திகளில் பயங்கரமாக பரவியது. ஆனால், இன்று வரை அது வதந்தி ஆகவே போய் விட்டது. இவர் கடைசியாக தமிழில் 1999 ஆம் ஆண்டு ‘சுயம்வரம்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். பின் நடிகை ஹீரா ராஜகோபால் அவர்கள் சினிமா துறையில் வாய்ப்பு குறைந்த பின்னர் 2002 ஆம் ஆண்டு தொழிலதிப புஷ்கர் மாதவ் நாட்டுவைர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகை ஹீராவுக்கும்,அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றார்கள். தற்போது நடிகை ஹீரா ராஜகோபால் அவர்கள் ஒரு என்.ஜி.ஓ ஒன்று ஆரம்பித்து அதில் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுத்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் பல புத்தகங்களை எழுதி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement