திருமணமாகி ரெண்டே நாளில் வேலைக்கு போன ரன்பீர் கபூருக்கு பதிலடி கொடுத்த முன்னாள் போர் விமானி- வைரலாகும் டீவ்ட்

0
420
Ranbir
- Advertisement -

திருமணமான இரண்டே நாளில் ரன்பீர் கபூர் வேலைக்கு சென்றது குறித்து டீவ்ட்டிற்கு ராணுவ வீரர் பதிவிட்ட பதில் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஹிந்தி திரையுலகில் சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தவர்கள் நடிகர் ரன்பீர் கபூர்- நடிகை ஆலியா பட். இவர்கள் இருவருமே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் ரன்பீர் கபூர் அவர்கள் நடிகை தீபிகா படுகோனேயை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். அதன் பிறகு இவர் கத்ரீனா கைஃப்பை பல ஆண்டுகள் காதலித்தார். ஆனால், எந்தக் காதலும் ரன்பீர் கபூருக்குக் கைகூடவில்லை.

-விளம்பரம்-

ரன்பீர் கபூர் காதலித்த இரண்டு பெண்களுமே வேறு ஒரு நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டனர். பின் ரன்பீர் கபூர் ஆலியா பட்டை காதலிப்பதாக கூறி இருந்தார். ஆனால், அதற்கு முன்பே நடிகை ஆலியா பட் தனக்கு 11 வயதிலிருந்தே ரன்பீர் கபூரைப் பிடிக்கும் எனத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு இவர்கள் இருவர் குறித்த காதல் கிசுகிசுகள் சோசியல் மீடியாவில் வைரலானது. பின் இருவரும் பகிரங்கமாக காதலிப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார்கள். அனைவரும் எதிர்பார்த்த இவர்களின் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி மிகச்சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

- Advertisement -

ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம்:

மேலும், இவர்களுடைய திருமணம் மும்பையில் தொடங்கியது. இயக்குனரும், ஆலியா பட்டை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்தவருமான கரன் ஜோகர் தான் ஆலியா பட்டின் மருதாணி சடங்கை தொடங்கி வைத்தார். இவர்களுடைய திருமணத்தில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், சகோதரிகள் மற்றும் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இசைக்கச்சேரி, மருதாணி பங்ஷன் என்று இவர்களுடைய திருமண சடங்குகள் எல்லாம் பஞ்சாபி முறைப்படி நடந்தது.

ரன்பீர் கபூர் குறித்த தகவல்:

மேலும், இவர்களுடைய திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாமே சோசியல் மீடியாவில் படு வைரல் ஆனது. இதனை பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ரன்பீர் கபூர் குறித்த செய்தி ஒன்று சோஷியல் மீடியாவில் படுவைரலானது. அது என்னவென்றால், ரன்பீர் கபூர் திருமணம் ஆகி இரண்டு நாட்களுக்கு பிறகு வேலைக்கு திரும்பி விட்டார் என்ற தகவல் வெளிவந்தது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

போர் விமானி அகஸ்டின் வினோத் பதிவு :

மேலும், இதனை பார்த்த முன்னாள் போர் விமானி அகஸ்டின் வினோத் பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், எனக்கு ஜூன் 18-ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு கார்கில் நடுப்பகுதியில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து இரண்டு மணி நேரத்திலேயே நானும் என் மனைவியும் வேலைக்கு திரும்பினோம் என்று பதிவிட்டிருந்தார். இப்படி இவர் பதிவிட்ட பதிவை பார்த்த எக்ஸ் இந்தியன் ஆர்ம Chief Ved Malik அவர்கள் பதில் பதிவு போட்டிருந்தார். அதில் அவர், இது தான் ஆர்மியின் ஸ்பிரிட் என்று கூறியிருந்தார்.

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு ராணுவ விமானி கூறியது:

இதனைத் தொடர்ந்து பலரும் ராணுவ வீரர்கள் மீது உள்ள தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதில் ஒருவர் போர் முடியும் வரை ஏன் உங்களால் திருமணத்திற்கு காத்திருக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இதை பார்த்த அகஸ்டின், சிறந்த கேள்வி நான் பேச்சுளராக இருக்க விரும்பவில்லை. நான் செல்வதற்கு முன் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் என்று பதிலளித்திருந்தார். இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement