ஹீரோ தான் தொடணும், காமெடியன் தொடக்கூடாது-ஹன்சிகாவை விளாசிய ரோபோ சங்கர்

0
2139
- Advertisement -

ஹீரோ தான் தொடணும் காமெடியன் கட்டைவிரலை கூட தொடக்கூடாது என்று ஹன்சிகா சொன்னதாக மேடையில் ரோபோ சங்கர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், டிவி மூலம் பல்வேறு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர்.

- Advertisement -

ரோபோ சங்கர் திரைப்பயணம்:

அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அதோடு இவருடைய மகளும் பிகில், விருமன் போன்ற படத்திலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியாகியிருந்த இரவின் நிழல் படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜன்ட் படத்திலும் ரோபோ சங்கர் நடித்திருந்தார்.

உடல் மெலிந்த ரோபோ:

இதனை அடுத்து பல படங்களின் காமெடியனாக ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிக மோசமாக இருந்தார். தற்போது இவர் தேறி வருகிறார். மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பார்ட்னர். இந்த படத்தில் நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் :

அதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் கூறியது, ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருக்கிறார். உருட்டி வைத்த மைதா பொம்மை போல இருக்கிறார். மேலும், படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை டச் செய்வது போன்ற ஒரு காட்சி இருந்தது. ஆனால், ஹன்சிகா சம்மதமே சொல்லவில்லை.

ஹன்சிகா குறித்து சொன்னது:

நானும் இயக்குனர் மனோஜ் தாமோதரனும் அன்சிகாவிடம் காலில் விழாத குறையா கெஞ்சியும் ஹன்சிகா நோ சொல்லிவிட்டார். பின் அவர் கால் விரலையாவது தொட்டு கொள்கிறேன் என்று கேட்டதற்கு ஹீரோ ஆதி மட்டும்தான் டச் செய்ய வேண்டும். காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என்று ஹன்சிகா சொல்லிவிட்டார். அப்போதான் புரிந்தது ஹீரோ ஹீரோ தான், காமெடியன் காமெடியன் தான் என்று ரோபோ சங்கர் பேசியது அரங்கத்தையே அதிர வைத்திருந்தது.

Advertisement