சாலையோரம் வசிக்கும் முன்னாள் முதலமைச்சரின் உறவினர் – ஒரு காலத்தில் ஆசிரியராக இருந்தவர்.

0
6926
ira
- Advertisement -

முன்னாள் முதல்வரின் உறவினர் ஒருவர் இரண்டு வருடமாக சாலையில் வசித்து வந்த செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் 10 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவரது மனைவியின் சகோதரி தான் இரா பாசு. இவர் 34 வருடங்கள் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்கு சரளமாக ஆங்கிலம், பெங்காலி பேசக்கூடியவர். இவர் 1976 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

-விளம்பரம்-

பிறகு இவர் தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரா நகரில் வசித்து வந்தார். பின் பகன் என்ற இடத்தில் வசித்து வந்த இவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனைத் தொடர்ந்து இவர் கடந்த இரண்டு வருடங்களாகவே கொல்கத்தா பகுதியில் சாலைகளில் வசித்து வந்ததாக தெரியவந்தது. அங்கிருக்கும் சாலை ஓரங்களில் வியாபாரிகள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு சாலையோர கடைகளில் தூங்கி தன்னுடைய தினசரி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவரை அடையாளம் கண்ட பலரும் இவரிடம் பேசி வந்தார்கள்.

- Advertisement -

பின் இவரிடம் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியது, நான் என்னுடைய சொந்த முயற்சியில் தான் ஆசிரியர் ஆனேன். எனக்கு எந்த ஒரு விஐபி அடையாளமும் தேவையில்லை என்று கூறியுள்ளார். மேலும், சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டன்லப் தொழிலாளர்கள் இவரை அழைத்து வந்து கௌரவித்து உள்ளனர். இந்த விழாவில் பேசிய பாசு அவர்கள் பல மாணவர்கள் இந்த எளிய ஆசிரியரை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னை கட்டி அணைக்கும் போது என்னையறியாமல் கண்ணில் கண்ணீர் வருகின்றது. அனைத்து ஆசிரியர்களும் என்மீது அன்பு செலுத்துகிறார்கள் என்று மனமுருக பேசியுள்ளார்.

தற்போது இவர் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதால் மாவட்ட நிர்வாகம் பாசுவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சரின் உறவினர் கடந்த இரண்டு வருடங்களாக சாலையில் வசித்து வந்த செய்தி பலருக்கும் ஆச்சயர்த்தை ஏற்படுத்தி வருகிறது. இது முன்னாள் முதலமைச்சருக்கு தெரியுமா? என்று பலர் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement