கொஞ்சம் அர்ஜண்ட், கூகுள் பே இருக்கா? மோகன் ஜி பெயரில் நடந்துள்ள மோசடி.

0
349
mohan
- Advertisement -

2016ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து அவர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கினார். குறைந்த பொருட்செலவில், நிறைவான படங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய பெருமை இவரையே சேரும். ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, கருணாஸ் போன்றவர்களது நடிப்பில் வெளியான திரௌபதி படம் நாடக காதலை மையமாக உருவாக்கப்பட்டது, இப்படம் சாதி ரீதியான வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று சில தரப்பினர் இப்படத்திற்கு எதிராகவும், இப்படத்தை ஆதரித்து சில தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

-விளம்பரம்-

இருப்பினும் இப்படம் சிறப்பான வசூலை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா போன்றவர்களது நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படமும் சில சர்ச்சைகளை கிளப்பியது. இயக்குனர் செல்வராகவன் நடிப்பிலும் பட்டையை கிளப்பி வருகிறார், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இவர் நடித்திருந்த விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனம் கிடைத்தது. இவர் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகி வரும் நிலையில், மோகன் ஜி இயக்கும் ஒரு புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

- Advertisement -

செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் :

இந்நிலையில் இவர் நடிக்கப்போகும் புதிய படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படத்தின் அதிகாரபூர்வ தலைப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது, மேலும் இந்த படத்தில் செல்வராகவனோடு நடிகர் நட்ராஜூம் இணையவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்துமலை முருகன் அருளுடன் 16.5.2022 அன்று பூஜை இனிதே நடைபெற்றது. அடுத்த திரைப்படத்தின் தலைப்பு #பகாசூரன், படப்பிடிப்பு ஆரம்பமாகியது” என்று பதிவிட்டார் . மேலும் பட பூஜையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

மோகன் ஜி போலி முகநூல் கணக்கு :

தனது பெயரில் முகநூல் கணக்கை தொடங்கி மெசஞ்சரில் பணம் கேட்டு ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார். தொழில்நுட்ப வளர்ந்து விட்ட சூழ்நிலையில் அனைத்து தேவைகளையும் செல்போன் மூலமே நிறைவேற்ற கொள்ள முடியும் என்று நிலை உருவாகி இருக்கிறது. தீபாவளிக்கு துணி எடுப்பது முதல் காலை டிபன் வரை எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து விடும். அதேபோல ஃபேஸ்புக் ட்விட்டர் ஆகியவற்றில் கணக்கு இல்லாத நபர்களே கிடையாது. உச்சபட்ச நடிகர்கள் ,பிரபலங்கள், அரசியல்வாதிகள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

டிஜிட்டல் செயலிகள் மூலம் திருட்டு :

மேலும், வங்கி சேவைகளைப் பெற தற்போதைய தொழில்நுட்ப உலகில் வங்கிகளுக்குச் செல்ல வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே பணம் பெறுதல் அனுப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக கூகுள் பே போன் பே உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் செயலிகள் இருக்கின்றன. இந்த நிலையில் முகநூல் மற்றும் டிஜிட்டல் வங்கி செயல்களை வைத்து மோசடியில் ஈடுபடும் கும்பல்களில் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. காவல்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் பெயர்களை முகநூலில் போலி கணக்கு தொடங்கி அவற்றின் மூலம் மற்றவர்களை தொடர்பு கொண்டு கூகுள் பே போன் பே மூலம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்த வகையான ஒரு மோசடியில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அதனை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என முகநூலில் கூறியிருக்கிறார்.

மோகன் ஜி பெயரை பயன்படுத்தி 25 பேரிடம் மோசடி :

தற்போது செல்வராகவனுடன் பாகாசுரன் திரைப்படத்தை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை கவனம் செலுத்தி வருகிறார். நிலையில் தான் தனது பெயரில் முகநூலில் கணக்கு தொடங்கி மெசஞ்சர் மூலம் பணம் பெற்று மோசடி நடப்பதாக கூறியுள்ளார் மோகன் ஜி. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள் அவர், தனது பெயரில் பயன்படுத்தி இதுவரை 25 மேற்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் கேட்டு மோசடி நடந்திருப்பதாகவும் ஆனால் இதுவரை யாரும் பணம் செலுத்தவில்லை எனவே அதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார் வழக்கமான ‘ஹாய்’,’ஹலோ’ என குறுஞ்செய்தியை அனுப்பிய மோசடி நபர்கள் அவசரமாக பணம் தேவைப்படு கிறது. ரூ.15 ஆயிரம் தொகையை கூகுள்பே அல்லது போன்பே வழியாக அனுப்பி வைக்கவும் இரண்டு நாளில் திருப்பிக் கொடுக்கிறேன் என பதில் வந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் மோகன் ஜியை தொடர்புகொண்டு கூறியுள்ளனர். இதனையடுத்தே எச்சரிக்கை வெளியிட்டுள்ளார் மோகன் ஜி.

Advertisement