லைலா முதல் பூமிகா வரை – தமிழில் மீண்டும் களமிறங்கும் 90ஸ் நாயகிகள். உங்க ஃபேவரைட் யார் 90ஸ் ரசிகர்களே ?

0
829
actress
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளாக பலர் வலம் வந்து இருக்கிறார்கள். பின் காலப்போக்கில் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் குடும்பம், குழந்தை என்று பல நடிகைகள் செட்டில் ஆகிவிட்டார்கள். தற்போது 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் நாயகிகள் மீண்டும் தமிழுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகை பூமிகா, மாளவிகா, மதுபாலா உட்பட பலரும் தற்போது சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்கள். ஒரு சிறிய பிரேக்கிங்க்கு பிறகு நடிகைகள் தமிழில் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தை தொடங்க இருக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பூமிகா:

சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் பூமிகா. இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். திரைப்பட 2000ம் ஆண்டில் வெளிவந்த யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் பத்ரி, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு தமிழில் என்று சில படங்களில் நடித்திருந்தாலும் என்றென்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே பூமிகா அவர்கள் பாரத் தாகூர் என்வரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின் நயன்தாராவின் ‘கொலையுதிர் காலத்திற்கு பின் இப்போது உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து உள்ளார். மலையாளத்திலும் அனுபமா பரமேஸ்வரனுடன் பட்டர்ஃப்ளை நடித்து இருக்கிறார்.

malavika

மாளவிகா:

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவிகா. அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். பின் இவர் சில படங்களில் துணை நடிகையாகும் ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார். சினிமாவில் பட வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போக கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை மாளவிகா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார். பிறகு குழந்தைகள், குடும்பம் என்று முழு கவனமும் மாளவிகா குடும்பத்திலேயே செலுத்தி இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார். ஜீவா – சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் மாளவிகா கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் ஜீவாவின் பாஸாக மாளவிகா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மதுபாலா:

சின்ன சின்ன ஆசை என்ற பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் மதுபாலா. இவர் கே பாலச்சந்திரனின் அழகன் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரோஜா, ஜென்டில்மேன், மிஸ்டர் ரோமியோ என பல படங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கான முத்திரையை பதித்தார். பின் இடையில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பிறகு சில வருடங்களுக்கு முன்னர் பாபி சிம்ஹாவின் அக்னி தேவி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது இவர் வெப்சீரிஸ்ஸிலும் நடித்து வருகிறார். இதுதவிர அருள்நிதி நடிக்கும் தேஜாவு, சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தில் மதுபாலா நடித்துள்ளார்.

லைலா:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் லைலா. இவர் சூர்யா, விக்ரம், அஜீத் என டாப் ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். இவரை சிரிப்பழகி லைலா என்று தான் அனைவரும் செல்லமாக அழைப்பார்கள். விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் லைலா. பின் பிதாமகன், நந்தா, தீனா என பல சூப்பர் ஹிட் படங்களில் ரவுண்டு வந்திருக்கிறார். அதற்குபிறகு திருமணம் ஆகி குழந்தை குடும்பம் என்று பிஸியாகிவிட்டார். இடையில் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டினார். இப்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அதோடு பெயரிடாத தமிழ் படம் ஒன்றிலும் லைலா நடித்து வருகிறார்.

tabu

தபு:

காதல் தேசம், சிறைச்சாலை, இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தபு. இவர் தமிழ் மொழியில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு மற்றும் பாலிவுட் என பிற மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது வரை அவர் பாலிவுட்டில் பிசியான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் தமிழில் அஜீத் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே 61 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. ஏகே 61 படத்தை வினோத் குமார் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வலிமை பட்டத்தில் பணியாற்றிய மொத்த டீமும் ஏகே 61 படத்தில் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement