விஜய் சேதுபதி மட்டுமல்ல, விஜய் முதல் வெற்றிமாறன் வரை பொது இடங்களில் தாக்கப்பட்ட 5 பிரபலங்கள்.

0
481
vetrimaran
- Advertisement -

பொதுவாகவே சினிமா நட்சத்திரங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தாலும் ஒரு சில நபர்களால் தாக்கப்படுவது வழக்கமாக உள்ளது. திரை பிரபலங்களை பார்த்தவுடன் ரசிகர்களும், பொது மக்களும் அவர்களுடன் பேசுவது, புகைப்படம் எடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், சிலர் தேவை இல்லாமல் அத்துமீறல் செயலில் ஈடுபடுகிறார்கள். அதிலும் சமீப காலமாகவே பிரபலங்களை தாக்குவதை வழக்கமான ஒன்றாக வைத்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இருந்தார்கள். அந்த நடிகர்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

-விளம்பரம்-

விஜய் சேதுபதி:

- Advertisement -

சமீபத்தில் விஜய் சேதுபதி பெங்களூரு சென்று இருந்தார். அப்போது விமான நிலையத்தில் விஜய்சேதுபதியை பின்னாடி இருந்து ஒருவர் எட்டி உதைத்து இருந்தார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்கள்.

சிவகார்த்திகேயன்:

-விளம்பரம்-

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி மாலையை சூடியவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கு உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கி இருந்தார்கள். பின் சிவகார்த்திகேயன் உதவியாளர்கள் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றார்கள்.

தளபதி விஜய்:

தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றிருந்தார். பின் அங்கிருந்து விழுப்புரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பொழுது தளபதியை பார்ப்பதற்காக மிகப் பெரிய கூட்டமே கூடியது. அதில் விஜயை பிடிக்காத சில நபர்கள் விஜயின் மீது தாக்குதல் நடத்தி இருந்தார்கள். உடனடியாக விஜயை அங்கிருந்து பாதுகாப்புடன் திருமண மண்டபத்தின் பின்புறம் வாயிலாக அனுப்பி வைத்தார்கள்.

இயக்குனர் வெற்றிமாறன்:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு நடந்த காவிரி போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம் அனைவருக்கும் தெரிந்ததே. அதே போல் சென்னையில் ஐபிஎல் நடக்கக்கூடாது என அண்ணாசாலையில் நடத்தப்பட்ட போரில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அந்த போராட்டத்தில் இயக்குனர் வெற்றிமாறனும் கலந்து கொண்டிருந்தார். அப்போது இயக்குனர் வெற்றிமாறன் போலீசாரால் தாக்கப்பட்டார்.

கோபிநாத்:

விஜய் டிவியில் மிகப் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக கோபிநாத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் நடுவராகவும், நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுதி மரியாதைக்கு செல்லும் போது கூட்ட நெரிசலால் போலீசாரால் கோபிநாத் தாக்கப்பட்டு இருந்தார்.

இப்படி இவர்கள் மட்டும் இல்லாமல் பல பிரபலங்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ளார்கள்.

Advertisement