பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.! என்ன சொன்னார் தெரியுமா..?

0
308

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுவிதமான மாற்றங்கள் புகுத்தபட்டபோதிலும் மக்களின் அபிமானத்தை பெறவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமன் கடுமையாக விமர்சத்துள்ளர்.

ganesh

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கணேஷ் வெங்கட்ராமன் மக்கள் மத்தியில் ஒரு ஒழுக்கமான போட்டியாளராக கருதப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறிய கணேஷ் வெங்கட் ‘இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகிறது, பிக் பாஸ் போன்ற சில நிகழ்ச்சிகள் பெண்களை பற்றிய நேர்மறையான எண்ணங்களை உருவாக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், இந்த நிகழ்ச்சி வெறும் பரபரப்பிற்காகவும், டி ஆர் பி-காகவும் தான் நடத்தப்பட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் தேவை’ என்று தெரிவித்துள்ளார்.

ganesh venkatraman

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் எதிர்ப்பிற்கும் முரண்பாடான பல விடயங்கள் நடந்து வருகின்றனர். அதே போல பெண்கள் ஆபாசமாக உடை அணிவது, பெண் போட்டியாளர்களிடன் ஆண் போட்டியாளர்கள் சற்று வரம்பு மீறி நடந்து கொள்வது போன்ற பல எரிச்சலூட்டும் விடயங்கள் நடைபெற்று வருகிறது.

எனவே, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெற்ற வரவேற்பை தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் அபிமானத்தை பெற தவறிவிட்டது. இந்த கருத்தை பலரும் முன்வைத்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்து கூறியுள்ளது இந்த நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் மேலும் குறைத்துள்ளது.