தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எத்தனையோ பிரபலங்கள் தற்போது நடிகர் நடிகைகளாக திகழ்ந்த வருகிறார்கள் பேபி ஷாலினி, பேபி ஷாம்லி துவங்கி பேபி சாரா, பேபி நைனிகா, பேபி அனிகா வரை தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்களை கண்டிருக்கிறது. அந்த வகையில் குஷ்பு கையில் வைத்திருக்கும் இந்தக் குழந்தையும் ஒரு பிரபலமான குழைந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் நடிகையானவர் தான்.
சின்னத்தம்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரபு மற்றும் குஷ்புவை வைத்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தார் இயக்குனர் பி வாசு. அது தான் 1991 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு கரை திரைப்படம். ஆனால் சின்னத்தம்பி அளவிற்கு இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. பிரபு குஷ்பு சந்திரசேகர் கவுண்டமணி ஸ்ரீவித்யா போன்ற பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.
மேலும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் வேறு யாரும் இல்லை நடிகை ஜெனிபர் தான்.விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த கில்லி படத்தில் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடித்தவர் ஜெனிபர். கில்லியில் காமெடி ரோலில் அசத்தியிருப்பார். அந்த படத்தில் அடிக்கடி தன் அப்பாவிடம் விஜயை மாட்டிவிட்டு திட்டு வாங்க வைப்பார். பின்னர் விஜயிடம் அடிக்கடி தலையில் குட்டு வாங்குவார்.
நடிப்பு, நடனம், நகைச்சுவை என தனது திறைமைகளை கொண்ட இவர் கில்லி படத்திற்கு முன்னதாகவே விஜய்யின் நேருக்கு நேர் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து கில்லி திரைப்படம் தான். கில்லி படம் வந்தபோது அந்த ஆண்டில் வெளியான படங்களிலேயே இந்தப்படம் தான் மிகப்பெரிய ஹிட் அடித்தது.