ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடர் இன்னும் சில தினங்களில் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சமீபகாலமாக கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து வெள்ளி திரைப்படங்களை விட சின்னத்திரை சீரியல்களை தான் மக்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் சீரியல்களில் வரும் காதல், ரொமான்ஸ், சண்டை காட்சிகள் எல்லாம் திரைக்கதை போலவே பயணிக்கிறது. இதனால் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் கொண்டாடப்படும் ஜோடி தான் அர்ஜுன்-வசு. இந்த ஜோடி நடிக்கும் சீரியல் கோகுலத்தில் சீதை. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் சீரியலில் ஒன்று தான் கோகுலத்தில் சீதை.
கோகுலத்தில் சீதை சீரியல்:
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஆஷா கவுடா, நந்த கோபால், வைஷாலி தனிகா, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த சீரியலில் இளைஞர்களை கவரும் வகையில் காதல், ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கிறது. அதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாகவே இடம் பிடித்துவிட்டது. இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
சீரியலில் நடிக்கும் நடிகர்கள்:
இது தான் இவருக்கு தமிழில் முதல் சீரியல். இந்த சீரியல் மூலம் இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் சின்னத் திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த தொடரின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார் ஆஷா கவுடா. அடுத்து இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் நந்தா நடித்திருக்கிறார். இந்த சீரியலின் மூலம் இவர் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கு முன்பு படங்களில் நடித்து இருக்கிறார்.
முடியப்போகும் சீரியல்:
மேலும், இந்த சீரியலில் இவர்களின் ரோமன்ஸ் வேற லெவல். இந்த ஜோடிக்காவே இந்த சீரியல் பார்க்கிற ஒரு கூட்டமும் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் மே 14ம் தேதியுடன் முடிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த என்றென்றும் புன்னகை தொடர் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது.
சீரியல் முடிய காரணம்:
தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே படு ஜாலியாக சுறுசுறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஆனால், இடையில் சீரியல் கதை ட்ராக், நேரமும் மாற்றப்பட்டது. இதனால் சீரியல் டிஆர்பி சரிவை சந்தித்தது. ஆகவே கோகுலத்தில் சீதை சீரியலை முடிக்க இதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.