பேர் என்னனு கேட்ட விஜய் மில்டனை அசிங்கப்படுத்தி துப்பிய “கோலி சோடா” சீதா !

0
7742
seetha - vijay milton
- Advertisement -

இயக்குநராய் எனது இரண்டாவது இன்னிங்ஸை கோலி சோடா படத்தின் மூலமாகத் தொடங்கினேன். 13 வயதேயான நான்கு பேர் தனக்கான அங்கீகாரம் கிடைக்க போராடுவதுதான் படத்தின் ஸ்கிரிப்ட்.
vijay milton
இந்தப் படத்தின் ப்ளஸாக நான் நினைக்கும் விஷயமே பதிமூணு வயசு பசங்களை ஃபிக்ஸ் பண்ணியதுதான். பலபேர் என்னிடம், ”டேய் பதிமூணு வயசு பசங்களை வைத்து படம் எடுத்தால் யாருமே பார்க்கமாட்டார்கள். வேண்டாம்”னு சொன்னாங்க. பட், பதிமூணு வயசு பசங்கதான் படம் ஹிட் அடிக்கக் காரணம்.

-விளம்பரம்-

முக்கிய கேரக்டரில் நடிக்கும் பசங்க எல்லாரும் ஈசியா கிடைச்சுட்டாங்க. பட், ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா வர கேரக்டருக்காக நிறையப் பேரை பார்த்தேன். யாரையும் பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் பைக்கில் போயிட்டு இருந்தப்போ, சீதா பொண்ணு நடந்து போயிட்டு இருந்தது. எனக்கு டக்குனு தோணுச்சு, இந்தப் பொண்ணு படத்துக்கு கரெக்டா இருக்குனு. உடனே பைக்கில் அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு போனேன். வண்டியை அந்தப் பொண்ணு முன்னாடி நிறுத்தி, ”வணக்கம் மா… என் பேர் விஜய் மில்டன், உன் பேர் என்ன மா” அப்படினு கேட்டேன். உடனே அந்தப் பொண்ணு ”தூ”னு துப்பிட்டு போயிருச்சு.
seetha
நான் அப்பவும் விடல. அந்தப் பொண்ணு பின்னாடியே ஒரு கிலோ மீட்டர் பைக்கை தள்ளிக்கிட்டே போனேன். அந்தப் பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போயிருச்சு. அந்த வீட்டின் வாசலில் அன்பரசன் பி.ஏ.பி.எல்னு போட்டிருந்தது. அட்ரெஸை மட்டும் நோட் பண்ணிக்கிட்டு அடுத்த நாள் என் வக்கீல் ஃப்ரெண்டை கூப்பிட்டுக்கிட்டு அந்த வீட்டுக் கதவை தட்டினேன். ஒருத்தர் வந்தார், அவர்கிட்ட நடந்தது எல்லாம் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரிச்சுட்டு, ”என் வீட்டில் எந்தப் பொண்ணும் இல்லை.

- Advertisement -

என் வீட்டுக்குப் பின்னாடி ஒரு ஒண்டிக் குடித்தனம் இருக்கு. அங்க கேட்போம்”னு கூப்பிட்டுப் போனார். அங்க பார்த்தால் நான் பார்த்த பொண்ணு இல்லை. வேறு ஒரு பொண்ணுதான் வந்தது. ”என்னடா இப்படி ஒரு சோதனை’’னு நினைச்சா, உடனே அந்த வீட்டு அம்மா காலையில் சீதா வந்துட்டு போனா ஒரு வேலை அவளா இருக்கும்னு சீதா வீட்டு அட்ரெஸ் கொடுத்தார்கள்.
seetha
உடனே என் அசிஸ்டென்ட் டைரக்டரை சீதா வீட்டுக்கு அனுப்பினேன். ”எப்படியாவது பேசி அந்தப் பொண்ணை நடிக்கக் கூப்பிட்டு வா’’னு சொன்னேன். அவனும் பல முன்னேற்பாடுடன் அங்கே போய் விஷயத்தை சொல்லியிருக்கிறான். உடனே அவங்க அம்மா, “விஜய் மில்டன் சாரை எனக்கு ரொம்ப நல்ல தெரியுமே”னு சொல்லியிருக்காங்க. எப்படினு நம்ம ஆளு டவுட்டோட கேட்க “நான் லிங்குசாமி வீட்டில்தான் பாத்திரம் கழுவுறேன். அதனால் விஜய் மில்டன் சார் அங்க வரப்போ பாத்திருக்கேன்னு சொல்ல, எங்களுக்கு ஒரே சிரிப்பு. ஒரு வழியா சீதாவைக் கண்டுபிடிச்சி படத்தில் நடிக்க வைத்துவிட்டேன்.

Advertisement