ஸ்டூடியோ வாசலில் பிச்சைக்காரராய் நிற்கும் லொள்ளு சபா மனோகர்.! ஏன் இந்த நிலைமை

0
266
mahohar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் ரசிகராக இருந்தால் நீங்கள் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகரின் பெயரை இந்நேரம் யூகித்திருப்பீர்கள் அல்லவா. காமெடி கலைஞசரான இவர் தொலைகாட்சியில் நடித்து பின்னர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

manohar lollu saba

தனது தனித்துவமான உடல் பாவனைகளாலும், வித்யாசமான வசன உச்சரிப்புகளாலும் பல தமிழ் படங்களில் காமெடியான அசத்தியுள்ளவர். குறிப்பாக சந்தானம் நடிக்கும் பெரும்பாலான படங்களில் இவரை நீங்கள் நிச்சயம் கண்டிருக்கலாம்.

நீங்கள் நினைத்து சரியே, இவர் வேறு யாரும் இல்லை நம்ம காமெடி நடிகர் லொள்ளு சபா மனோகர் தான். தற்போது இவர் “காட்டேரி ” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது, அப்போது அந்த படத்தில் தனக்கு இருக்கும் கெட்டப்பிலேயே வந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் மனோகர்.

manohar

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.மேலும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன்,யூ ட்யூப்’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே.