‘எப்படி இருந்த மனுஷன்’ – திருமண நிகழ்ச்சிக்கு கைத்தாங்களாக அழைத்து வரப்பட்ட கவுண்டமணி – ரசிகர்களை நெகிழ வைத்த வீடியோ இதோ.

0
1480
Goundamani
- Advertisement -

கவுண்டமணியின் தற்போதைய நிலையை குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் கமண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் பிறந்தது திருப்பூர் மாவட்டம் மடத்தூர் கிராமம் என்றாலும் இவர் வாலிப பருவத்தில் வளர்ந்தது எல்லாம் வல்லகுண்டபுரம் என்ற கிராமம் தான்.

- Advertisement -

கவுண்டமணி பூர்விகம்:

இது உடுமலை, பொள்ளாச்சிக்கும் இடையில் இருக்கு. இந்த வல்லகுண்டபுரம் கிராமம் கவுண்டமணியின் பாட்டி வீடாகும். அதோட கவுண்டமணியின் அக்காவும் அங்கே தான் இருக்கிறார். இவர் முதலில் நாடக மேடையில் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார். முதலில் இவர் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

கவுண்டமணி– செந்தில் காம்போ :

அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

வைரலாகும் கவுண்டமணி வீடியோ:

இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதோடு இவர் நடிகராக மட்டும் இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார். கவுண்டமணியை அந்த காலத்து அஜித் என்று தான் சொல்வார்கள். ஏன்னா, கவுண்டமணி அப்போதே பேட்டிகளை அதிகம் குடுப்பது இல்லை. அப்போதே ரசிகர் மன்றங்களை கலைத்தவர். 90கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை என இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கவுண்டமணியின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கவுண்டமணி அவர்கள் பிரபலம் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்று இருந்தார்.

கவுண்டமணியின் தற்போதைய நிலை:

அப்போது அவரை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு போய் இருந்தார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கவுண்டமணிக்கு என்ன ஆச்சு? உடல்நிலை பிரச்சனையா? என்று நலம் விசாரித்து வருகிறார்கள். கவுண்டமணி ரசிகர்கள் பலரையும் இந்த வீடியோ கலங்க செய்து உள்ளது. இந்த விழாவிற்கு கவுண்டமணி மட்டுமில்லாமல் செந்தில், ராமராஜன் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement