சூர்யாவை உயரமாக காட்ட இதை படம் முழுவதும் இதை தான் செய்தோம் – இயக்குனர் சொன்ன செம சீக்ரெட்.

0
106124
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார்நடிகர் சூர்யா. சமீபத்தில் நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் வெளிவந்த காப்பான் படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சூர்யாவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த படம் காக்க காக்க. இந்த படம் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன், ரம்யா கிருஷ்ணன், டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சூர்யா அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் வேற லெவல் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்திற்கு முதலில் “பின்குறிப்பு” என்று தலைப்பு வைத்தர்கள். பின்குறிப்பு தலைப்புடன் போஸ்டரும் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. பின் சில காரணங்களால் அந்த படத்தின் தலைப்பு காக்க காக்க என்று மாற்றப்பட்டது.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காக்க காக்க திரைப்படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கௌதம்மேனன், இந்த படம் குறித்து சில சுவாரசியமான சம்பவங்களை கூறியுள்ளார், அதில் பேசிய கௌதம் மேனன், நான் முதலில் இந்த கதையில் ஜோதிகாவிற்காக எழுதிவிட்டு நான் அவரிடம் இதைப் பற்றி பலமுறை சொன்னேன். அவர் தான் இந்த கதையில் அஜித் மற்றும் விக்ரம் ஆகிய யாராவது நடிக்கலாம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஆனால், சில பல காரணங்களால் அவர்களால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

வீடியோவில் 44 நிமிடதடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அதன் பின்னர் ஜோதிகா என்னிடம் அந்த படத்தை பார்க்க சொன்னார். அந்த படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன்பின்னர்தான் சூர்யா இந்த படத்தில் நடிக்க வந்தார் என்று கூறிய கௌதம் மேனன்மேலும் இந்த படத்தில் சூர்யாவை உயரமாக காட்ட வேண்டும் என்பதற்காக பெரும்பாலான ஷாட்கள் லோ ஆங்கிள் ஷாட்டாகத்தான் இருக்கும். அதே போல நீங்கள் கூர்ந்து கவனித்தால் சூர்யாவிற்கு பின்னாலிருக்கும் எந்த ஒரு பொருளும் சூர்யாவை விட உயரமாக இருக்காது என்றும் கூறியிருக்கிறார்கள்

Advertisement