விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு திரிஷா தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் புது வதந்தி வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள் நடிகர் விஜய்-சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 22 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் ஒன்றாக மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா.
விஜயின் தீவிர ரசிகையான சங்கீதா விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய் பெற்றோர்களையும் சந்தித்து இருக்கிறார். சங்கீதாவை விஜய் பெற்றோர்களுக்கு பிடித்துப் போக சங்கீதாவிடம் விஜயை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டிருக்கிறார்கள். இதற்கு சங்கீதாவும் சம்மதித்து இருக்கிறார். ஆனால், ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு யோசித்து இருக்கும் விஜய் பின்னர் பெற்றோர்களின் ஆசைக்காக சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.
விஜய்-சங்கீதா விவாகரத்து:
இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 22 ஆண்டுகளாக சங்கீதாவுடன் வாழ்ந்து வந்த விஜய் சில மாதங்களாக சங்கீதாவுடன் பிரிந்துவிட்டதாக செய்திகள் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு அவர் இரண்டாம் திருமணம் செய்துப்போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து விஜய் தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.
விழாவில் விஜய் சொன்னது:
பின் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் சமீபத்தில் நடந்த விழாவில், இந்த சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் எல்லாம் 75% பொய்யானவை. நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சில பேர் கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சில போலியான தகவலையும் வெளியிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த ப்ரச்சனை ஓய்ந்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் லியோ பட கட்சியில் விஜய்-சங்கீதா விவாகரத்து சர்ச்சை இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் வெளியாகி இருக்கிறது.
லியோ படம்:
மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் இரண்டே நாளில் விஜயின் லியோ படம் 210 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனால் படக்குழு மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் லியோ படத்தில் ஒரு லிப்லாக் காட்சியில் விஜய்-திரிஷா நடித்து இருக்கிறார்கள். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போதே இவர்கள் குறித்து கிசு கிசுக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது லியோ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். லியோ படத்தில் முதன்முறையாக விஜய்- திரிஷாவின் லிப்லாக்சின் வந்திருக்கிறது.
Divorce rumours ku ithuvum oru kaaranamo
— chettyrajubhai (@chettyrajubhai) October 21, 2023
Yaar sonnathu – yaaro pic.twitter.com/lan7o8zell
திரிசா- விஜய் காட்சி:
மேலும், ஷூட்டிங் போதே திரிசா- விஜய் இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங் செய்ததாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய் தன்னுடைய திருமண நாளன்று லண்டனில் உள்ள தன்னுடைய மனைவி, குழந்தைகளுடன் இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் திரிஷாவுடன் வெளிநாட்டில் சுற்றுலா பயணம் சென்றிருந்தார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டிருக்கிறது. தற்போது லியோ படத்தில் இவர்களுடைய லிப் லாக் சீன் மூலம் விஜய்-சங்கீதா விவாகரத்து உறுதியாகி இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.