‘மழையால் சரிந்த பிரம்மாண்டமான செட் ‘ – மரகதநாணயம், ராட்சசன் பட பிரபலத்தின் ஷூட்டிங் செட்டில் ஏற்பட்ட விபத்து.

0
380
shooting
- Advertisement -

பிரம்மாண்டமாக போடப்பட்ட செட் கனமழையால் சரிந்து விழுந்தது. நூலிழையில் படக்குழுவினர் உயிர் தப்பிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இணை ஒளிப்பதிவாளராகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியவர் ஜி.வி.பெருமாள் வரதன். இவர் மரகதநாணயம், ராட்சசன், ப்ரூஸ்லீ, கன்னி மாடம் போன்ற பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இவர் 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண் குமார் தயாரிக்கிறார். காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சுரேஷ் ரவி நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், படத்தில் கதாநாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு மதன் கார்கி பாடல் எழுதுகிறார். மேலும், இந்த படத்தில் பல்லவ மன்னர்களின் முக்கியவரான நந்திவர்மனை பற்றி இதுவரை சொல்லப்படாத ஒரு உண்மை தகவலை மையப்படுத்தி இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

இதையும் பாருங்க : சூர்யா என்ன பண்ணார், முழு பொறுப்பும் நான் தான் – அறிக்கை வெளியிட்ட ஜெய் பீம் பட இயக்குனர்.

- Advertisement -

அதோடு இந்த படத்தில் சில வரலாற்றுக் காட்சிகள் படமாக்கப்படுவதால் செங்கல்பட்டு பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் படக்குழுவினர் அமைத்து இருந்தார்கள். அதில் முக்கியமாக அக்காலத்து குருகுலம் போல் ஒன்றை லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாக்கியிருந்தார்கள். படத்தில் மிக முக்கியமான காட்சியை படமாக்குவதற்காகவே இந்த செட் போடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த செட் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த இடத்தில் இருந்த படக்குழுவினர் 5 பேர் உயிர் தப்பினார்கள்.

மேலும், இந்த விபத்து நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த 5 பேரும் அங்கிருந்து வெளியேறி நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதுகுறித்து இயக்குனர் பெருமாள் வரதன் கூறியிருப்பது, இந்த விபத்தால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் விபத்தில் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருந்தது ஆறுதலாக இருக்கிறது. கடவுளுக்கு தான் இதற்காக நன்றி சொல்ல வேண்டும். சந்தோஷத்துடன் படப்பிடிப்பைத் தொடங்கிய எங்களுக்கு எதிர்பாராத இந்த விபத்து சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. இருந்தாலும் இதில் இருந்து நாங்கள் மீண்டு மீண்டும் வந்து படப்பிடிப்பை விரைவில் தொடங்குவோம் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement