தன் வாழ்வில் மிக முக்கியமான பெண்ணுக்கு மேடையில் கவின் சொன்ன கவிதை. யாருக்கு தெரியுமா ?

0
2318

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். கவின் அவர்கள் படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். சினிமா துறையில் மீது இருந்த ஆர்வத்தினால் முதலில் நண்பர்களின் உதவியால் குறும்படங்கள் நடிக்க ஆரம்பித்தார். மேலும், நடிப்பைக் கற்றுக் கொள்ள கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். பின்னர் கவின் சின்ன சின்ன ஷார்ட் பிலிம் படத்தில் கூட நடித்து உள்ளார். இவர் நடித்த குறும்படங்களின் மூலமாக தான் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” என்ற சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் ‘வேட்டையன்’ என்கிற சரவண பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் கவின் நடித்து உள்ளார். பின் தான் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டேன். பிரியா வாரியரின் லவ் ஸ்டோரிய கேளுங்க.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினுடைய வாழ்க்கையே மாறியது என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவினுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் படை, ரசிகர்கள் மன்றம் என ஆரம்பித்தார்கள். சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கவின் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது விருது விழாவின் தொகுப்பாளினி ஒருவர் கவினை பார்த்து ‘நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீர்கள்’ என்று கேள்விப்பட்டோம். அதனால் உங்கள் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பெண்ணாக இருக்கும் நபரை நினைத்து ஒரு கவிதை எழுதுங்கள்.

kavin

அந்த பெண் உங்கள் அம்மாவாக இருந்தாலும் சரி ஒரு கவிதை கூறுங்கள் என்று கேட்டிருந்தார். மேலும், நீங்கள் வேறு யாரையும் நினைத்து கவிதை எழுத வேண்டாம் என்றும் கூறி இருந்தார். அதற்கு கவின் அவர்கள் “அம்மா” என்ற சொல்லே ஒரு கவிதை தானே என்று கூறினார். இதை கேட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து மேடையில் கொண்டாடினார்கள். தற்போது கவின் அவர்கள் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ஒரு படத்தில் கூட கவின் ஹீரோவாக நடிக்கிறார் என்று தெரிய வந்து உள்ளது.

-விளம்பரம்-
Advertisement