அன்னையின் நினைவாக கஷ்டப்பட்டும் பெண்களுக்கு ஆரி கொடுத்த சப்ரைஸ் கிப்ட்- குவியும் வாழ்த்துக்கள்

0
171
- Advertisement -

தன் அன்னையின் நினைவாக ஏழைப் பெண்களுக்கு நடிகர் ஆரி செய்திருக்கும் உதவி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைசுழி என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நெடுஞ்சாலை, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தான். இந்த சீசனில் முதல் இடத்தை ஆரி தான் பிடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஆரிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதற்குப் பிறகு ஆரி அவர்கள் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஆரி செய்த உதவி:

அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். இளைய சமுதாயத்திற்கு விவசாயம், இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணவர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அன்னையின் நினைவை ஒட்டி நடிகர் ஆரி செய்து இருக்கும் செயல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ஆரி அவர்கள் மகளிரை கொண்டாடும் வகையில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை மூலமாக ஏழ்மையில் இருந்து கொண்டு வேலை செய்யும் 10 பெண்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ஆரி உதவி செய்த பெண்கள்:

சாலைகளை சுத்தம் செய்யும் 3 பெண் பணியாளர்கள் , தெருவோர கூழ் கடை வைத்திருக்கும் 2 பெண்கள், பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் 3 பெண்கள், திரைப்பட புரடக்சன் யூனிட்டில் பாத்திரம் கழுவும் 2 பெண்கள் என மொத்தம் 10 பேரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி தங்க நாணணயத்தை அவர்களுக்கு ஆரி பரிசாக கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஆரியின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

-விளம்பரம்-

ஆரி அளித்த பேட்டி:

மேலும் இது குறித்து நடிகர் ஆரி கூறியது, ஒவ்வொரு மகளிரும் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். அதிலும் நம் ரத்த உறவுகளான அம்மா, மனைவி, அக்கா, தங்கை, குழந்தை என அனைவரையும் தாண்டி நமக்காகவும் இந்த சமூகத்திற்காகவும் உழைக்கக்கூடிய கோடான கோடி மகளிர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். என்னுடைய அம்மாவின் நினைவாக சமூகத்திற்காக உழைக்கும் மகளிர் சிலரை தேர்ந்தெடுத்து நான் அவர்களுக்கு சின்ன பரிசை அன்பாக கொடுத்திருக்கிறேன். இந்தப் பணியை இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறேன்.

மகளிர் குறித்து சொன்னது:

இது மட்டுமில்லாமல் கடினமாக உழைத்து போராடிக் கொண்டிருப்பவருடைய வாழ்வாதாரத்தை மாற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் இதை செய்யப் போகிறேன். முதலில் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் அல்லவா, என்னுடைய குடும்பத்திற்காக உழைக்கும் என்னுடைய மனைவிக்கு நன்றி சொல்லி அனைத்து மகளிருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த சமூகம் சொல்லித் தர ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement