மீண்டும் இணையும் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி- இந்த முறை யாருடைய வாழ்கை கதை? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

0
781
- Advertisement -

சூர்யா-சுதா கொங்காரா கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுதா கொங்காரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் துரோகி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த இறுதிச்சுற்று படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவர் நடிகர் சூர்யாவை வைத்து சூறரை போற்று என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப்,ஊர்வசி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கின்றார்கள்.

- Advertisement -

சூறரை போற்று தேசிய விருது:

இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று இருந்தது. அதோடு கடந்த ஆண்டு இந்த படம் 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது. இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள்.

சூறரை போற்று ஹிந்தி ரீமேக்:

தற்போது சுதா கொங்காரா அவர்கள் சூறரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சூர்யா-சுதா கொங்காரா கூட்டணி மீண்டும் இணைய இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் சுதா அவர்கள் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க
இருப்பதாகவும், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா- சுதா கொங்கரா-ஜி வி பிரகாஷ் கூட்டணி:

கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்த படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று சுதா கொங்காரா தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அப்போது அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் டீவ்ட்:

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் அவர்கள் சுதா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து குறித்து பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் அவர், பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் சுதா கொங்கரா. சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில் நீங்கள் செய்த மாயாஜாலத்தை உலகம் காணக் காத்திருக்கிறது. இப்படம் பாலிவுட்டை அதிர வைக்கப் போகிறது. மேலும், அதை முடித்துவிட்டு தமிழில் அடுத்ததாக நீங்கள் பண்ணவுள்ள படம் தெறிக்கப் போகுது என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் சூர்யா- சுதா கொங்கரா-ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது

Advertisement