போராட்டத்தின்போது உருவான காதல்’ அரசியல்வாதியைத் திருமணம் செய்தார் தனுஷ் பட நடிகை.

0
616
swara
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. நேற்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான “வாத்தி” திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை, விமர்சங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தான் தனுஷ் நடித்த பாலிவுட் பட நடிகை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஸ்வரா பாஸ்கர் :

அதாவது தனுஷ் நடித்த “ராஞ்சனா” என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை ஸ்வரா பாஸ்கர். இந்த படம் அம்பிகாபதி என தமிழில் டப் செய்யப்பட்டு வலியானது. இடபத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்க இடண்டாவதி நாயகியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஸ்வரா பாஸ்கர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அதே போல அடிக்கடி ஏதாவது ஒரு கருத்தை சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறார்.

- Advertisement -

திருமணம் :

குறிப்பாக தற்போது இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி அரசை விமர்சித்து அதனால் பல முறை சோசியல் மீடியாக்களில் ட்ரோல்களுக்கு உள்ளக்கியுள்ளார். இந்த நிலையில் தான் நீண்ட நாள் காதலன் பஹத் அகமத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் அதிகாரா பூர்வமாக கடந்த 6ஆம் தேதி நீதிமன்றத்தில் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்து நேற்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக நடிகை ஸ்வரா பாஸ்கர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்வரா பாஸ்கர் இன்ஸ்டா பதிவு :

அந்த பதிவில் தங்களுக்கு இடையே காதல் எப்படி நடந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் “சில சமயங்களில் உங்களுக்குப் பக்கத்தில் இருந்த ஒன்றை நீங்கள் வெகு தொலைவில் தேடுகிறீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் நாங்கள் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வரவேற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

டோராட்டத்தில் தொடங்கிய காதல் :

கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச்சட்டதிற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் ஸ்வரா பாஸ்கரும் பஹத் அகமதும் கலந்து கொண்டனர். அதில் தான் இவர்களுக்கு இடையே அறிமுகம் ஏற்பட்டது. அந்த அறிமுகம் பின்னர் காதலாக மாற தற்போது திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு பஹத் கைகளை பிடித்துக்கொண்டு நடிகை ஸ்வரா பாஸ்கர் வருவது போல வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement