இத்தனை கோடிய என்னால கட்ட முடியாது, Gst வழக்கில் Gv பிரகாஷ் தரப்பு வாதம் – வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

0
481
Gvprakash
- Advertisement -

சேவை வரி செலுத்த கூறி ஜிஎஸ்டி ஆணையர் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மீது தொடர்ந்து இருக்கும் வழக்கு குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். அதுவும் , இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

- Advertisement -

ஜிவி பிரகாஷ் திரைப்பயணம்:

இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சிலர் படமும், ஜெயில் படமும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன் பின் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளிவந்த இருந்த படம் செல்பி. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் படங்கள்:

தற்போது விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கும் படம் 13. இந்த படம் ஹாரர் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் அவர்கள் “ட்ராப் சிட்டி”(trap city) என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள். அதன் பின் ஜிவி பிரகாஷ் அவர்கள் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜிவி மீது தொடரப்பட்ட வழக்கு:

இந்த நிலையில் சேவை வரி செலுத்தாது குறித்து ஜிஎஸ்டி ஆணையர் ஜிவி பிரகாஷ் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இசை படைப்புகளுக்காக ஜி.வி.பிரகாஷ் அவர்கள் சேவை வரி என்ற பெயரில் 1.84 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து ஜிவி பிரகாஷ் குமாரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அவர்கள், ஜிவி பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஜிஎஸ்டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸ்க்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.

நீதிபதி போட்ட உத்தரவு:

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து ஜிவி பிரகாஷ் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் அவர், இசை படைப்புகளின் காப்புரிமையை பட தயாரிப்புகளுக்கு நிரந்தரமாக வழங்கப்படுகிறது. அதன்பின் உரிமையாளர்கள் அவர்கள் தான். என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என்று கூறியிருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக்கு அமரவும் முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நான்கு வாரங்களில் ஜிஎஸ்டி இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

Advertisement