ஜிவி பிரகாஷின் கள்வன் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
406
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஜிவி பிரகாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கள்வன். டில்லி பாபு தயாரிப்பில் இந்த படத்தை பி வி சங்கர் இயக்கத்தில் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஞானசம்பந்தம், வினோத் முன்னா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வனப்பகுதியை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் வனப் பகுதியை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ வசிக்கும் கிராமத்தில் யானைகள் அடிக்கடி வந்து ஆபத்தை ஏற்படுகிறது. இதனால் ஊர் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜி வி பிரகாஷ் தன்னுடைய நண்பர் தீனாவுடன் சேர்ந்து திருடுவது, மது அருந்துவது போன்ற தேவையில்லாத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் நாயகி இவானாவை சந்திக்கிறார்.

- Advertisement -

பின் இவானா மீது ஜீவிக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால், ஜிவி உடைய காதலை இவானா மறுக்கிறார். இருந்தாலும் விடாமல் ஜீவி இவானவை துரத்திக் கொண்டிருக்கிறார். அவருக்காக ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவையும் தத்தெடுத்து கொள்கிறார். இதையெல்லாம் ஜிவி பிரகாஷின் நண்பர் நினைத்து சந்தோஷப்படுகிறார். ஆனால், இதற்கு பின்னணியில் ஜிவி பிரகாஷ்க்கு வேறு திட்டம் இருப்பது தெரிய வருகிறது.

அந்த திட்டம் என்ன? ஜிவி பிரகாஷ் உடைய திட்டம் நிறைவேறியதா? அவருடைய காதலை இவானா ஏற்றுக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை. காதல், காமெடி, துரோகம் , சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கமர்சியல் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். குறிப்பாக வனப்பகுதியை காண்பித்து குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

இவரை அடுத்து படத்தில் வரும் தீனா, இவானா, பாரதிராஜா ஆகியோருடைய நடிப்பும் நன்றாக இருக்கிறது. நடிகர்களுடைய தேர்வை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, தீனாவின் உடைய காமெடி காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. இந்த படத்திற்கு ரேவாவின் பின்னணி இசை பக்க பலத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், வனப்பகுதி, காடு, யானை என்ற இயற்கை நிறைந்த சூழலை அழகாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். மொத்தத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜிவி பிரகாஷின் கள்வன் படம் ஒருமுறை சென்று பார்க்கலாம்.

நிறை:

நடிகர்களின் நடிப்பு நன்றாக இருக்கிறது

படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை சேர்த்திருக்கிறது.

கதைக்களம் நன்றாக இருக்கிறது

பெரிதாக சலிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இல்லை

தீனா காமெடி நன்றாக இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

கொஞ்சம் சுவாரசியத்தை கொடுத்திருக்கலாம்

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

மொத்தத்தில் கள்வன் – குடும்பத்துடன் பார்க்கும் படம்

Advertisement