என் அம்மா திட்டி அனுப்பியதனால் தான் இந்தப் பாடல் ஹிட் ஆனது என்று மனம் திறந்து பாடகி சைந்தவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சைந்தவி. இவர் கர்நாடக இசை பாடகி ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த அன்னியன் திரைப்படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடலின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பாடி இருக்கிறார். இதனிடையே இவர் தன்னுடைய பள்ளி நண்பனான இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பின்னும் சைந்தவி சினிமாவில் பாடி கொண்டு வருகிறார். அதோடு ஜிவி பிரகாஷ்- சைந்தவி இருவரும் இணைந்து நிறைய பாடல்களை பாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் பாடகி சைந்தவி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு கிடைத்த அட்வான்டேஜ், டிஸ்அட்வாண்டேஜ் இரண்டுமே அசெம்சன்ஸ் தான். என்னுடைய முதல் பாடல் 2005ஆம் ஆண்டு வெளியானது.
கடந்த 18 ஆண்டுகளாக நான் பின்னணி பாடகியாக இருக்கிறேன். என்னிடத்தில் வந்து திருமணத்திற்கு பிறகு நீங்கள் பாடுவதை நிறுத்தி விட்டீர்களா? ஏன் பாடுவதில்லை? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஏன் இப்படி கேட்கிறார்கள், நான் எங்கேயும் போகல, இங்க தானே நிறைய பாடிக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் யோசிப்பேன். இப்படி அவர்கள் யோசிப்பது தான் எனக்கு பெரிய டிஸ்அட்வான்டேஜ். அதேசமயம் இந்த பாட்டை கொடுத்தால் அவங்க நல்லா பாடிடுவாங்க என்ற ஒரு அசெம்ப்ஷனும் இருக்கிறது.
அதுதான் என்னுடைய அட்வான்டேஜ். அதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்கிறேன். நான் பாடிய பாடலில் கரெக்ஷன் என்று சொல்லி அதை மாற்றி பாட வேண்டும் என்று என்னுடைய கசின் திருமணத்திலிருந்து என்னை அழைத்தார்கள். நான் போக மாட்டேன் என்றேன். ஆனால், என் அம்மா திட்டி அனுப்பி வைத்தார்கள். அன்னைக்கு எனக்கும் அம்மாவிற்கும் செம சண்டை. அங்க போனா, அடடா மழைடா பாடல் பாட சொல்லி விட்டார்கள். சரின்னு பாடிட்டு வந்து அம்மாவிடம், நான் சொன்ன மாதிரி வேற பாடல் தான் பாட வைத்தார்கள் என்றேன். அதற்கு அவர் உனக்கு என்ன பிரச்சனை என்று சொன்னார்கள்.
சரி ஒன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அந்த படம் வெளியாகி அடடா மழைடா பாடல் பெரிய ஹிட்டானது. படம் ரிலீசான பிறகு இன்டர்வியூரில் லிங்குசாமி சார், படம் முழுவதும் மேல் வெர்சன் பாடல் தான் இருக்கு. இதை படம் பண்ணி முடித்த பிறகு ரியலைஸ் பண்ணோம். அதனால் தான் உங்களை மீண்டும் பாட வைத்தோம் என்று சொன்னார். நல்ல வேளை கடவுளுக்கு தான் நன்றி. அந்த வாய்ப்பு மிஸ் செய்து இருப்பேன் என்று கூறியிருக்கிறார் .