விரைவில் உனக்கு ரெட் கார்ட் தான், விமர்சிக்கும் நெட்டிசன்கள் – முதன் முறையாக சர்ச்சையில் சிக்கிய விக்ரம்.

0
427
Vikram
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பரீச்சயமான நபர்களில் ஒருவர் சரவணன் விக்ரம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். தற்போது சமீபத்தில் தான் இந்த சீரியல் முடிவடைந்தது. அதோடு இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருப்பவர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.இவர் மீது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால், நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இப்போது வரை சரவணன் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் செய்யவில்லை. மற்ற போட்டியாளர்கள் சண்டை போட்டாலும் கூட அதில் அவர் ஈடுபடவும் இல்லை, கமெண்ட்ஸ் சொல்வதும் இல்லை. அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துவிட்டு வந்து விடுகிறார். இதனாலே பிக் பாஸ் ரசிகர்கள் இவரை கிண்டலடித்து விமர்சித்திருந்தார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் மாயா & கோ டீமில் சேர்ந்துகொண்டு அர்ச்சனாவை எல்லாம் கேள்வி கேட்டார். அப்போது விசித்ரா ‘நீ போன வாரமே நாமினேட் ஆகியிருப்பாய். இன்னும் ஒரு சில வரம் தான் நீ இருப்பாய். அதற்குள் நல்ல ஜாலியாக இரு என்று சொல்லி அனுப்பினார். அதில் இருந்தே இவர் சமூக வலைத்தளத்தில் கேலி செய்யப்பட்டு வருகிறார். அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை தானே டைட்டில் வின்னர் என்று இவரே கூறிக்கொண்டதால் இவரை டைட்டில் வின்னர் சரவணன் என்று கேலி செய்து வந்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் முதல் முறையாக சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விக்ரம். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் கிட்சினில் இருக்கும் பூர்ணிமாவின் அருகில் சென்ற விக்ரம், அவரை மேலும் கீழும் ஒருமாதிரி பார்த்துவிட்டு ‘எனக்கு தூக்கமே வரல’ என சொல்ல, அதற்கு பூர்ணிமா ‘போய் படு வரும்’ என சொல்லுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் விக்ரமின் பார்வையை சரியில்லை. இவருக்கு ரெட் கார்ட் கொடுங்கள் என்று புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.

சமீபத்தில் கூட பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் டீசர்ட்களை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விக்ரம் அந்த இடத்திற்கு வருகிறார். பூர்ணிமாவிடம் அவர் ஏதோ சொல்கிறார். அதற்கு பூர்ணிமா செருப்பால் அடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டுக் கொண்டு விக்ரம் எதுவும் பேசாமல் திரும்பி திரும்பி பார்த்து செல்கிறார். இதை பார்த்து நெட்டிசன்கள், முதுகுத்தண்டு இல்லாமல் இருப்பதால் தான் எல்லோரும் திட்டுகிறார்கள் என்றெல்லாம் விமர்சித்தனர்.

Advertisement