கடவுள் பக்தி என்றால் என்ன ? வினோத் பேச்சை கனிமொழி பேச்சோடு ஒப்பிடும் ரசிகர்கள். மிஸ் பண்ண கூடாத வீடியோ.

0
497
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் எச் வினோத். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஹிட் படங்களை கொடுத்த வினோத்திற்கு மூன்றாவது படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை இயக்கி முடித்திருக்கிறார் எச் வினோத். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலங்களான ஜி பி முத்து அமீர் பாவணி சிபி சக்கரவர்த்தி என்று பலர் நடித்திருக்கிறார்கள். அதுபோக படத்தில் எண்ணற்ற சின்னத்திரைங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் எச் வினோத் கடவுள் பக்தி குறித்து பேசி இருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு விகடன் வலைதளத்திற்காக பர்வீன் சுல்தானா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேர்காணல் செய்திருந்தார். அதில் கடவுள் நம்பிக்கை குறித்த ஒரு உரையாடலில் கனிமொழி தனது பார்வையை எடுத்து வைத்தார். அதில் அவர் கூறியதாவது.“கடவுள் நம்பிக்கை இல்லனு சொல்ற நிலை வருதுன்னா அது உன்ன நம்புற இடத்துல இருந்து வரணும். கடவுள் நம்பிக்கைங்குறது சாஞ்சுக்குறதுக்கு ஒரு தோள் மாதிரி.

அது இல்லங்குறப்போ உனக்கு நீயே தான் அந்தத் தோள் . அந்த strentgh உனக்கு வரணும். வரப்போ கடவுள் நம்பிக்கை வேணுமா வேணாமான்னு முடிவு எடுத்துக்கோ”. ஒரு பகுத்தறிவுவாதியின் மொழியில் இருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. அண்மையில் இதே போன்றதொரு உரையாடலில் இயக்குனர் H.வினோத் கூறிய கருத்தினை பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. கடவுள் நம்பிக்கை கொண்டவரான அவர் சொல்லும் பார்வை.

-விளம்பரம்-

“கடவுள் இருக்கு – இல்ல. அந்த topicகுள்ள போக மாட்டேன். எனக்கு கடவுள் வேணுமா இல்லையான்னு கேட்டா எனக்கு தேவப்படுது. ஏன்னா கடவுள் இல்லாம வாழலாம்னு சொல்றதுக்கு நிறைய clarityயும் தைரியமும் தேவைப்படுது. அது எனக்கு இன்னும் வரல. என்னுடைய சிக்கல்கள்ல இருந்து என்ன move -on பண்ணிக்கிறதுக்கு கடவுள் தேவையா இருக்கு எனக்கு.
நான் கடவுள கும்பிடறதால யாருக்கும் எந்த பிரச்னையும் இல்ல.

கடவுள வச்சு வியாபாரம் பண்ணவோ அதிகாரத்த அடையவோ இல்ல வெறுக்கவோ பிரிக்கவோ try பண்ணும்போதுதான் கடவுள் பிரச்சனையா மாறுறார். Mathematicsல provlems solve பண்றதுக்கு ஒரு X போட்டு solve பண்ணுவோம்ல அப்டி எனக்கு கடவுள்.”கடவுள் குறித்த இந்த இருவேறு பார்வைகள்தான் தமிழ்நாட்டின் மானுட நிலை. பரவலாக கடவுள் நம்பிக்கை கொண்டவர்களின் – கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் ஆழ்ந்த பார்வையாக இருக்க முடியும். இங்கு எத்தனையோ அரசியல் குளறுபடிகள் மிகுந்திருந்தாலும் மதம் சார்ந்த அரசியல் மட்டும் தமிழ்நாட்டில் ஏன் பிரதானமாக ஆகவில்லை ஆக்கப்படவில்லை என்பதற்கும் இந்த புரிதலே பதில்.

Advertisement