கதையே கேக்கல, அந்த சீன சொன்னதும் சரினு சொல்லிட்டார் – எச்.வினோத் பேட்டியால் அஜித்தை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
410
ajith
- Advertisement -

துணிவு படத்தில் நடிப்பதற்கு அஜித் சம்மதம் தெரிவதற்கான காரணம் குறித்து இயக்குனர் வினோத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை படங்களில் நடித்து அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் தனது உழைப்பினால் உயர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்க்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

- Advertisement -

துணிவு படம்:

அந்த அதிக சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

மேலும், படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது . படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கிறார். அதோடு சில முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சிஜோய் வர்கீஸ், ஜான் கொகைன், வீரா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-

படத்தின் ரிலீஸ்:

சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் வினோத் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் அஜித் குறித்தும், துணிவு படம் குறித்தும் கூறியிருப்பது, அஜித் சார் துணிவு படத்தோட கதையைக் கேட்கவில்லை. அந்த படத்துடைய ஒரு சீன் மட்டும் தான் கேட்டார்.

அஜித் குறித்து வினோத் சொன்னது:

அது அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. உடனே அந்த படம் பண்ணலாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக அஜித் சாருக்கு ரொம்ப பிடித்த அந்த சீனை படத்தில் வைக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார். வினோத்தின் இந்த பதிலை தொடர்ந்து கதையை கூட கேட்கமாலா ஒரு ஹீரோ படத்தில் நடிப்பார் என்று கேலி செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்கள் பலரும் அஜித்தை வச்சி செய்து வருகின்றனர்.

Advertisement