திருமணத்திற்கு பிறகு இது ஒன்று தான் மாறியிருக்கிறது – ஹன்ஷிகா மோத்வானி ஓப்பன் டாக்.

0
479
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. “ஷக்கலக்கா பூம் பூம்” என்ற சீரியலின் மூலம் தான் ஹன்சிகா தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் ஹிந்தியில் வெளியான கோய் மில் கயா, ஹவா, ஆப்ரா கா டாப்ரா, ஜாகோ, போன்ற பல சீரியல்களில் குழந்தைக்கு நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின்னர் நடிகர் அல்லு அர்ஜின் நடித்திருந்த “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் ஹன்சிகா வெள்ளித்திரைக்கு முதன் முதலாக அறிமுகமாகினார்.

-விளம்பரம்-

திரைப்பயணம் :

அதன் பின்னர் இவர் தனுஷ் நடித்திருந்த “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வேலாயுதம், எங்கேயும் காதல், பிரியாணி, ஆம்பள, புலி, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, ரோமியோ ஜூலியட், போகன், குலேபகாபலி, மான் கராத்தே, அரண்மனை 1 மற்றும் 2 ,என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு நடித்திருந்த “துப்பாக்கி முனை” என்ற திரைப்படத்தில் 2018ஆம் ஆண்டு கடைசியாக ஹன்சிகா நடித்திருந்தார்.

- Advertisement -

திருமணம் :

அதன் பின் இவர் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைபடத்தில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான “மஹா” என்ற திரைப்படத்தில் ஹன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த நிலையில் தான் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியுமான சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்து கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஒரு வாரம் கோலாகலமாக நடந்தது.

சென்னை வசந்த ஹன்ஷிகா :

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக சென்னை வந்த ஹன்சிகா செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னுடைய திருமண வாழ்க்கை மிகவும் மகிச்சியாக செல்கிறது என்று கூறினார். மேலும் திருமணத்திற்கு பிறகு எதாவது மாறியிருக்கிறதா என செய்தியாளர் கேட்டபோது “எதுவும் மாறவில்லை விரலில் ஒரு மோதிரம் மட்டுமே புதிதாக வந்திருக்கிறது அவ்வளவுதான் என்று கூறினார். மேலும் தற்போது படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள ஹன்ஷிகா அடுத்த ஒரு மாதத்திற்கு சென்னையில் தான் இருக்க போவதாக கூறினார்.

-விளம்பரம்-

7 படங்களில் நடிக்க உள்ளேன் :

மேலும் தான் திருமணத்திற்கு பிறகு ஓய்வு எடுத்த பின்னர் சமீபத்தில் தான் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதோடு வரும் காலங்களில் இடைவெளி இல்லாமல் சுமார் 7 படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், அவற்றில் 2 வெப் சீரிஸ் என்பதினால் வரும் நாட்களில் தான் மிகவும் பிசி என்றும் கூறினார். மேலும் ஹன்ஷிகா திருமணம் செய்வதற்கு முன்னரே திருமணத்திற்கு பிறகு மற்ற நடிகைகள் போல படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement