போன் நம்பரை கேட்ட ரசிகருக்கு. தனது போன் நம்பரை சொன்ன ஹன்சிகா. வீடியோ இதோ.

0
5627
hansika-motwani
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், போகன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஹன்சிகா அவர்கள் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

-விளம்பரம்-

இந்நிலையில் மகா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி அவர்கள் தனது ரசிகர்களுக்கு இடை இடையில் இன்ஸ்டாகிராமில் காட்சியளித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ரசிகர்களின் கேள்விக்கு ஹன்சிகா பதில் அளித்தும் வருகிறார். நவீன டிஜிட்டல் நுட்ப உலகம் பிரபலங்களும், ரசிகர்களும் சந்திப்பு நிகழ்த்துவதற்கு ஏதுவாக உள்ளது. அது மட்டுமில்லாமல் பிரபலங்கள் தங்களது ரசிகர்களை தொடர்பு கொள்வதற்கு சமூக வலைத்தளங்களை தேர்ந்தெடுப்பதை வழக்கமான ஒன்றாக மாற்றி விட்டார்கள். இப்போதெல்லாம் பிரபலங்கள் ரசிகர்களை நேரில் சந்திப்பதை விட சோஷியல் மீடியாக்களில் தான் அதிகம் சந்திக்கிறார்கள்.

இதையும் பாருங்க : இந்த நோயினால் தான் அமலா பாலின் தந்தை இறந்தாராம். இறப்பதற்கு முன்பாகவே அமலா பாலே அளித்த பேட்டி.

- Advertisement -

சோசியல் மீடியாவில் புகைப்படங்கள், வீடியோக்களை போடுவதன் மூலம் ரசிகர்களும் பிரபலங்களும் தன்னுடைய கருத்துகளை மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இதன் மூலம் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் நெருக்கமாக இருக்கும் உறவு ஏற்படுகிறது. மேலும், நடிகை ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 33 லட்சத்திற்கும் அதிகமாக ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஹன்சிகா அவர்கள் வீடியோக்களை வெளியிட்டு தன்னுடைய வசீகரக் குரலால் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

பல ரசிகர்கள் நடிகைகள் மேக்கப் இரகசியங்கள், அடுத்த திட்டங்கள், அடுத்த படம் குறித்த பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். அதற்கேற்றவாறு ஹன்சிகாவும் சரியாக பதில் அளித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில பேர் எல்லை தாண்டியும் கேள்விகளை எழுப்பினார்கள். அதில் ரசிகர் ஒருவர் ஹன்சிகாவின் வாட்ஸ்அப் நம்பரை கேட்டுள்ளார். அதற்கு ஹன்சிகாவும் நாசுக்காக, புத்திசாலித்தனமாக நம்பரை கொடுக்கவில்லை. பின் மற்றொருவர் ஹன்சிகாவின் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஹன்சிகா திருமணம் இப்போது இல்லை, திருமணத்திற்காக எந்த திட்டங்களும் போடவும் இல்லை. என்னுடைய கவனம் முழுவதும் படத்தில் உள்ளது என்று பதிலளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இதைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் இதற்கெல்லாம் மேலே போய் உங்களை நான் காதலிக்கிறேன், என்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்டுள்ளார். அப்போது அங்கு ஹன்சிகாவின் ஷாட் தயாராக இருந்ததால் இந்த கேள்வியை தவிர்த்தார்.இப்படி ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு நடிகை ஹன்சிகா அவர்கள் அழகாக பதில் அளித்து உள்ளார். தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போது யூ ஆர் ஜமீல் இயக்கும் மகா என்ற படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இது ஹன்சிகா வின் 50வது படமாகும். இந்த படத்தில் ஹன்சிகா பல்வேறு கெட்டப்பில் நடித்து இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தின் மூலம் ஹன்சிகாவும், சிம்புவும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement