90ஸ் காலகட்டத்திலேயே சத்யராஜ், குஷ்பூ, ரஜினி என்று பல்வேறு படங்களில் சிறு ரோலில் நடித்துள்ள சுந்தர் சி.

0
613
sundarc
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் தற்போது நடிகர்களாகவும் ஜொலித்து வருகின்றனர், அந்த வகையில் சுந்தர் சியும் ஒருவர். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. 1995-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘முறை மாமன்’. இந்த படத்தினை சுந்தர்.சி இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக குஷ்பூ டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களை இயக்கினார் சுந்தர்.சி.

- Advertisement -

சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமான படம் :

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சுந்தர்.சி, அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க திட்டமிட்டார். 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தலைநகரம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக சுந்தர்.சி நடித்திருந்தார்.

சுந்தர் சி இயக்கிய படங்கள் :

இது தான் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த முதல் தமிழ் திரைப்படமாம். ‘தலைநகரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு’ போன்ற சில படங்களில் நடித்தார் சுந்தர்.சி. அதன் பிறகு அவரே இயக்கிய ‘நகரம் மறுபக்கம், அரண்மனை 1 & 2’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் சுந்தர்.சி. ஆனால், ரசிகர்கள் பலரும் இவரை இயக்குனர் சுந்தர் சியாக பார்க்கவே விரும்புகின்றனர்.

-விளம்பரம்-

சுந்தர் சி நடித்த முதல் படம் :

பொதுவாக இயக்குனர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்கள் தான். அந்த வகையில் சுந்தர் சியும் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான். அந்த வகையில் இவர் மணிவண்ணனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். இவரை நடிகராக அறிமுகம் செய்து வைத்ததும் அவர் தான். சுந்தர்.சி இயக்குநராவதற்கு முன்பு சத்யராஜின் ‘வாழ்க்கைச் சக்கரம்’ என்ற படத்தில் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாராம்.

முறைமாமன் – அருணாச்சலம் :

இந்த படத்தை மணிவண்ணன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாமன், அருணாச்சலம்’ ஆகிய படங்களிலும் அவர் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் சுந்தர் சி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக சுந்தர் சி அரண்மனை 3 படத்தில் நடித்து இருந்தார். தற்போது தலைநகரம் 2 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement