சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு, ஹரிஹரன் விளாசல் – வீடியோவை பகிர்ந்த பா.ஜ.க எக்ஸ் தளம்

0
407
- Advertisement -

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாடு சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில் அவர், சிலவற்றை நாம் எதிர்க்க கூடாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா அதை எல்லாம் ஒழிக்க தான் வேண்டும். அது போல தான் இந்த சனாதனமும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும். சனாதனம் என்றால் என்ன? அதன் பெயரே சமஸ்கிருததில் இருந்து வந்தது தான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனத்திற்கு அர்த்தம் என்னவென்றால் நிலையானது, மாற்றமுடியாதது, யாரும் கேள்வி கேட்க்க முடியாது என்று அர்த்தம்.

- Advertisement -

சனாதனம் குறித்து சொன்னது:

எல்லாவற்றிற்கும் கேள்வி கேட்க வேண்டும் என்பது தான் இந்த கமினியூஸ்ட் இயக்கமும் இந்த திமுக இயக்கமும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கேலி செய்யும் வகையில் செய்தி தாளில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதற்க்கு நம்முடைய முதல்வர் சமூக வலைதளங்களில் அதற்க்கு எதிர்ப்பாக பதிவு செய்து இருந்தார். தமிழகத்தில் மாற்ற கூடாது எதுவும் இல்லை என்று மாற்றி காட்டியவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி.

பாஜக கண்டனம்:

பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது? கணவனை இழந்த பெண்களுக்கு உடன் கட்டை ஏற வைத்தது. திராவிட அரசு மக்களை முன்னோக்கி அழைத்து செல்கிறது. ஆனால், ஒன்றிய அரசு மக்களை பின்னோக்கி அழைத்து செல்கிறது. இது வரை இந்தியாவில் உள்ள சிறந்த மருத்துவர்களை உருவாக்கியது தான் தமிழ்நாடு. ஆனால் அதை சிதைக்கவேண்டும் என்று வந்தது தான் நீட் தேர்வு. சிலருக்கு நிச்சயம் வயிற்று எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். இந்த மாநாடுகளை தொடர்ந்து நடத்த வேண்டும்

-விளம்பரம்-

உதயநிதி பேட்டி:

இங்கு பேசிவிட்டு அனைவரும் கலைந்து விடக் கூடாது. இங்கு பேசிய கருத்துகளை பொது மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். என்றும் அமைச்சர் உதயநிதி கூறியிருந்தார். இப்படி உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. பாஜகவின் தேசிய தலைவர்களில் பலருமே தங்களுடைய கண்டனங்களை பதிவிட்டிருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் கூட இது தொடர்பாக புகார் அளித்திருந்தார்கள். இதை அடுத்து சமீபத்தில் உதயநிதி அளித்த பேட்டியில், நான் திரும்பத் திரும்ப சனாதனம் குறித்து பேசுவேன்.

ஹரிஹரன் பேட்டி:

நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் பாடகரும், இசையமைப்பாளமான ஹரிஹரன், இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கையை தப்பு என சொல்லும் விஷயங்களில் குறை சொல்பவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது. நமது தேவைகள் நம்பிக்கைகள் என்ன என்பது நம் மனதிற்கு தெரியும். அனைத்தையும் ஏற்றுக் கொள்வதை சனாதன தர்மம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement