பிக் பாஸ் வீட்டில் நடந்ததை பற்றி மனம் நெகிழும் ஹரிஷின் அம்மா !

0
2341
harish

“ஹரீஷ் எங்களுக்கு ஒரே பையன். அவனைப் பிரிஞ்சு இருக்கிறது கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும், அவனின் எதிர்கால வளர்ச்சிக்காக இந்த நாள்களை இனிதே கடந்துட்டிருக்கோம்” என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் கெளசல்யா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் ஹரீஷ் கல்யாணின் அம்மா.

harish

- Advertisement -

“ஹரீஷின் குழந்தைப் பருவத்தில் எங்க வீடு ஷூட்டிங் ஹவுஸா இருந்துச்சு. அதனால், சின்ன வயசிலிருந்தே நிறைய ஷூட்டிங் மற்றும் சினிமா கலைஞர்களைப் பார்த்து வளர்ந்தான். சினிமா தாக்கம் அவனுக்கு வராமல் இருக்கணும்னு தனி ரூமில் வெச்சுதான் ஹோம்வொர்க், விளையாட்டு எல்லாம் நடக்கும். ஹரீஷ் பத்தாம் வகுப்பு வந்ததும் படிப்பு பாதிக்கக்கூடாதுன்னு வீட்டை ஷூட்டிங்குக்கு விடுறதையே நிறுத்திட்டோம். ஆனாலும், அவனுக்கு சினிமா ஃபீல்டு மேல் ஆசை வந்திருச்சு. ப்ளஸ் டூ முடிச்சதும் அந்த ஆசையைச் சொன்னான். ‘எனக்கு கம்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து வேலை செய்ய விரும்பமில்லை. என் திறமையை வெளிப்படுத்தும் எதிர்காலத்துக்கு சப்போர்ட் பண்ணுங்க’னு சொன்னான். ‘சினிமா ஆசை இருக்கட்டும். முதல்ல படிப்புதான் அவசியம், அதை முதலில் கவனிக்கணும்’னு சொல்லி இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டோம். ஆறே மாசத்தில் செட் ஆகலைனு வெளியவந்துட்டான். அவனுக்குப் பிடிச்ச விஸ்காம்ல சேர்ந்துப் படிச்சான். அப்புறம் நிறைய போராடித்தான் சினிமாவில் நடிகரானான். தனக்கான அடையாளத்தை தக்கவெச்சுக்க நிறைய முயற்சிகளை எடுத்துட்டிருக்கான்” என்கிறார் கெளசல்யா.

harish

-விளம்பரம்-

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் மகனின் செயல்பாடுகளைப் பற்றி சொல்லும்போது, ”நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து ஹரீஷ் தவறாமல் பார்த்துட்டிருந்தான். ஒருநாள் ‘நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கப்போறேன். என் கரியருக்கு அந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும். அங்கே கொடுக்கிற சவால்களை எதிர்கொள்ள முடியும்’னு சொன்னான். பையனோட கான்ஃபிடென்ட் எங்களுக்கு நம்பிக்கைக் கொடுக்க, நானும் கணவரும் ஒப்புகிட்டோம். ஆரம்பத்தில் வீட்டுக்குள்ளே போனதும், முதல் வாரம் மத்தவங்களோடு மிங்கிள் ஆக சிரமப்பட்டான். இப்போ எல்லோரோடும் நல்லாப் பழகுறான். எல்லா டாக்ஸ்கையும் ஸ்போர்டிவா எடுத்துச் செய்யறான். பையன் நம்மோடு இல்லையேனு ஒரு வாரம் சரியா தூக்கம் இல்லாம இருந்திருக்கேன். பிக் பாஸ் வீட்டில் அவனுடைய செயல்பாடுகளைப் பார்த்த பிறகு இப்போ சந்தோஷமா தூங்கறேன்” எனச் சிரிப்புடன் தொடர்கிறார்.

harish

“போன வாரம் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே நானும் கணவரும் போனோம். டிவியில் பார்த்ததைவிட நேரில் பிரமிப்பாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. அந்த வீட்டுக்குள்ள இருக்கும் போட்டியாளர்கள் எல்லோருமே அன்பாகப் பழகினாங்க. குறைவான நேரத்திலும் எல்லோரிடமும் பேசினோம். அந்த வீட்டிலிருந்து கிளம்பும் சமயம், ‘எனக்கு ஒரு முத்தம் கொடும்மா’னு ஃப்ரீஸ் டாஸ்க்ல இருந்தபடியே ஹரீஷ் சொன்னான். சந்தோஷமா முத்தம் கொடுத்துட்டு வந்தேன். அவனுக்கு நாங்க ரெண்டுப் பேரும்தான் உலகம். நாங்க அவன்கிட்டே ஃப்ரெண்ட் மாதிரிதான் நடந்துக்குவோம். படிப்பு, நடிப்பு, ஃப்ரெண்ட்ஸ், பெர்சனல் பிரச்னைனு எல்லாத்தையும் ஓபனாச் சொல்வான். அடிக்கடி எங்கிட்ட முத்தம் கேட்பான். அதனால், பிக் பாஸ் வீட்டில் கொடுத்த முத்தம் கண் கலங்கச் செய்துருச்சு.

harish

சினிமா ஃபீல்டை ஹரீஷ் உயிரா நேசிக்கிறான். டான்ஸ், ஃபைட்டிங், ஸ்விம்மிங், சிலம்பம், ஹார்ஸ் ரைடிங் என தகுதிகளைத் தொடர்ந்து வளர்த்துட்டிருக்கான். ஓர் அம்மாவாக பிக் பாஸில் பையன் ஜெயிக்கணும்ங்கிற ஆசை இருக்கு. அவனின் செயல்பாடுகளும், மக்களின் வாக்குகளும் அதை நிறைவேற்றும்னு நம்பறேன். எல்லா டாஸ்கையும் நல்லபடியா செய்வான். அவன் வெளியே வரும்போது, நிறைய அனுபவத்தோடு வருவான்” எனப் புன்னகைக்கிறார் கெளசல்யா.

Advertisement