சம்பள பிரச்சனையால் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆரவ்.! – இதுதான் காரணம்

0
3021
Aarav

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
Aarav
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக ஜூலிக்கு கிடைத்துள்ளது.ஹரிஷ் கல்யாண் மற்றும் மேக்கப் அழகி ரைசா ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குனர் இளன் இயக்க உள்ளார்.

இவர் தற்போது கிரகணம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவு பெற்ற நிலையில் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம்.

ஹரிஷ், ரைசா ஜோடி சேரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி வெளியிடப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்று இயக்குனர் இளன் கூரியுள்ளார்.
Harish Kalyan
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவ்வை தான் அப்ரோச் பண்ணினார்களாம். அவரோ கதையைக் கூட கேட்காமல் சம்பளம் அதிகம் கேட்டாராம். எனவே ஆரவ்வை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு ஹரிஷ் கல்யாணை கமிட் செய்துள்ளனர்.