ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்து சிறு வயதிலேயே சற்று திறமையான திரைகளைஞராக உருமாறி இருக்கிறார்.
No more single ?? Need all your blessings ?? நன்றி ??
— Hiphop Tamizha (@hiphoptamizha) November 30, 2017
‘க்ளப்புல மப்புல’ என்ற ஆல்பம் சாங்கில் ஆரம்பித்து தற்போது மீசையை முறுக்கு என்னும் சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார். இந்த படம் ரசுகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் செய்த இண்டிபெண்டன்ஸ் ஆல்பங்கள் எல்லேமே ஹிட் தான். அதில் ஒரு ஆல்பம் தான் ‘டக்கரு டக்கரு’. நாட்டு மாடுகளைப் பற்றிய சர்வதேச வணிகத்தை எதிர்க்கும் ஒரு விழிப்புணர்வு ஆல்பமான இது ஜல்லிக்கட்டு தை புரட்சியில் பெரும் பங்கு வகித்தது.
தற்போது இந்த திறமையான கலைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் இனிமேல் நான் சிங்கிள் இல்லை என தனது நிச்சியம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.