நட்பே துணை பாடல்களை பங்கமாக கலாய்த்த Standup காமெடியன் – ஆதி கொடுத்த பதிலடி.

0
2680
hiphop
- Advertisement -

ஹிப் ஹாப் தமிழா என்று சொன்னாலே போதும் இளைஞர்கள் அனைவரும் துள்ளி குதித்து கொண்டாடுவார்கள். இவர் முதலில் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார். இதற்கு முன் கூட ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார். அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சுந்தர். சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின் இவர் பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு, நட்பே துணை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் இவர் நடிப்பில் “நான் சிரித்தால்” என்ற படம் வெளிவந்தது. மேலும், கடந்த சில நாட்களாக ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணன் அவர்கள் ஆதி குறித்து வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஆதி நடித்த நட்பே துணை படம் குறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். அகாடமி விருது என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை யூட்யூபில் 2 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : அட, கொடுமையே Ullu வெப் தொடரில் அரை நிர்வாண காட்சியில் நடித்துள்ள கோமாளி பட பஜ்ஜி ஆன்டி.

- Advertisement -

ஜெகன் அவர்கள் ஹிப் ஹாப் ஆதியின் படத்தை ட்ரோல் செய்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதிலும் நகைச்சுவை நடிகர் ஜெகன் கிருஷ்ணன் அவர்கள் சிறந்த பாடல்கள் பட்டியலில் ஹிப் ஹாப் ஆதியின் நட்பேதுணை படத்தின் பாடல்களை படு மோசமாக கிண்டல் செய்துள்ளார். ஆதியின் ஒவ்வொரு பாடல் வரிகளையும் எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு கேலி செய்துள்ளார். அதிலும் படத்தில் ஹிப்ஹாப் ஆதி பேசிய வசனங்கள் எல்லாம் பிற படங்களில் இருந்து காப்பி செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

இதனை பார்த்த ஹிப் ஆதி கூறியது, ஊன்றி பிழைக்காதே! ஆம், ஒருவரின் உழைப்பை ஏளனம் செய்து அதில் நீ சேர்க்கும் பணமோ, புகழோ நிலைக்காது. ஒருவர் முன் மண்டியிட்டு அவரை ஊன்றி ஊன்றி நீ பிழைக்கும் போது உன் முட்டி தேய்ந்து போவது மட்டுமல்ல, சூழ்நிலை சரியில்லை என்றால் உடைந்தும் போகலாம் என்று கூறி உள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement