அஜித்தை தாக்கி கிண்டலான வசனம்.! நோ சொன்ன விஜய்.! இயக்குனர் சொன்ன தகவல்.!

0
1255
Vijay-Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரண்டு மாபெரும் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். எந்த நடிகர் நடிகைகளுடன் பேட்டி எடுத்தாலும் இவர்களை பற்றிய கேள்வி இடம் பெறாமல் இருக்காது. அந்த வகையில் பிரபல செல்வபாரதி விஜய் குறித்து ஸ்வாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for director selvabharathi

விஜய் மற்றும் அஜித் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர்களாக இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியாக கடும் போட்டி நிலவியது. இவர்களது படங்களில் கூட இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பல வசனங்களை பேசி உள்ளதையும் நாம் அறிவோம்.

இதையும் படியுங்க : சன் டிவியில் ஜோதிடம் சொன்ன அக்கா.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

2003 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சினேகா நடிப்பில் வெளிவந்த ‘வசீகரா ‘திரைப்படம் ஓரளவிற்கு வெற்றியை கண்டது. இந்த படத்தை செல்வபாரதி என்பவர் இயக்கியிருந்தார் இந்த படம் வெளியான சில மாதத்திற்கு முன்னர் தான் அஜித் நடித்த வில்லன் படமும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for ajith villain movie

வசீகரா படத்தில் அஜித்தை தாக்கும் விதமாக ‘நீ பெயர் வைத்தால் தான் வில்லன், நான் எப்பவுமே வில்லன்டா’ என்று ஒரு வசனம் இடம் பெற்றிருந்ததாம். ஆனால், அந்த வசனத்தை பேச மறுத்த விஜய் செல்ல பாரதியிடம்’ அண்ணே இதெல்லாம் வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற செல்வபாரதி கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement