கேப்டன் பட்டம், வழக்கு தொடர்ந்த ராணுவ வீரர் – ஆனால், மக்கள் மனதில் நீங்காத அந்த படம். ஒரு சுவாரசிய பின்னணி.

0
450
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினி ஆகியோரின் நூறாவது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தும் தன்னுடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் மூலம் விஜயகாந்த் மாபெரும் வெற்றி படைத்திருக்கிறார். ரஜினிகாந்த் நூறாவது திரைப்படம் ராகவேந்திரா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்பு பெறவில்லை. உலகநாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் கமலஹாசன் நூறாவது படம் ராஜபார்வை.

-விளம்பரம்-

இந்த படத்தில் இடம்பெற்ற அந்தி மாலை பொழிகிறது பாடல் எவர்கிரீன் பேவரட் என்றே சொல்லலாம். ஆனால், படம் தான் படுதோல்வி அடைந்தது. நடிகர் சத்யராஜ் நூறாவது படம் வாத்தியார் வீட்டு பிள்ளை, நடிகர் பிரபுவின் 100வது படம் ராஜகுமாரன். இந்த படங்கள் எல்லாமே தோல்வி அடைந்தது. ஆனால், இதில் யாராலும் பறிக்க முடியாது எட்டாத கனியை பறித்து சாதனை படைத்திருக்கிறார் விஜயகாந்த். இவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன்.

- Advertisement -

விஜயகாந்த் 100வது படம்:

இந்த படம் 1991 கேப்டன் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜயகாந்த்துக்கு என்று பாடலே கிடையாது. இயக்குனர் ஆர் கே செல்வமணி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணிசையும் வேற லெவல்ல இருக்கு. இந்த படம் 275 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இன்றும் விஜயகாந்தை கேப்டன் என்று எல்லோரும் அழைப்பதற்கு இந்த படம் தான் காரணம். இந்த படம் வீரப்பனை பற்றிய கதை.

இந்த படத்தில் மன்சூர் அலிகான் வீரபத்திரனாக வீரப்பனாக நடித்திருப்பார். விஜயகாந்த், மன்சூர் அலிகான் நடிப்பு வேற லெவலில் இருக்கும். ஹீரோக்களுக்கு எப்படி எல்லாம் காட்சிகள் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள் என்பதை பார்த்து பார்த்து ஆர் கே செல்வமணி இந்த படத்தில் செய்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் விஜயகாந்தினுடைய ஒவ்வொரு படத்திலும் கேப்டன் என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

-விளம்பரம்-

கேப்டன் பெயர் காரணம்:

அதற்குப் பிறகுதான் சினிமா துறையில் கேப்டன் என்ற பெயர் உருவானது. மேலும், விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக பணியாற்றிய போதும், திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தொழில் விஷயங்களிலும் கூட இவரை பிரபலங்கள் பலருமே கேப்டன் என்று தான் அழைத்தார்கள். அதுமட்டுமில்லாமல் விஷால், விவேக், மும்தாஜ் ஆகியோர் தங்களுடைய படங்களில் விஜயகாந்தை செல்லமாக கேப்டன் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

கேப்டன் பெயர் சர்ச்சை:

இப்படி இருக்கும்போது விஜயகாந்துக்கு கேப்டன் பட்டம் தரக்கூடாது என்று 2017 ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் இந்த பட்டம் ராணுவ வீரர்களுக்கு சொந்தமானது, நடிகர்களுக்கு கிடையாது என்றெல்லாம் கூறியிருந்தார். இருந்தாலும், அவருடைய இந்த கேப்டன் பெயர் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. அதற்கு பின்னால் விஜயகாந்த் கேப்டன் டிவி என்று தொலைக்காட்சி ஆரம்பித்தார். கேப்டன் என்றால் அது விஜயகாந்த் தான் என்றும் மறையாத புகழாக அந்த பெயர் மாறியது.

Advertisement